1. Home
  2. தமிழ்நாடு

இந்தியாவில் நாள் ஒன்றுக்கு 15 லட்சம் பேர் ஒமைக்ரானால் பாதிக்கப்பட வாய்ப்பு!!

இந்தியாவில் நாள் ஒன்றுக்கு 15 லட்சம் பேர் ஒமைக்ரானால் பாதிக்கப்பட வாய்ப்பு!!


இந்தியாவில் ஒமைக்ரான் பரவினால் தினமும் சுமார் 15 லட்சம் பேர் வரை தொற்றினால் பாதிக்கப்படுவார்கள் என்று நிதி ஆயோக் உறுப்பினர் டாக்டர் வி.கே.பால் எச்சரித்துள்ளார்.

இங்கிலாந்தில் கடந்த 24 மணி நேரத்தில் 93,045 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் பிரிட்டன் மக்கள் தொகையில் 1 கோடியே 11 லட்சத்து 90 ஆயிரத்து 354 பேருக்கு கொரோனா பாதித்துள்ளது.

இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தியவர்களையும் ஒமைக்ரான் விட்டுவைக்கவில்லை. அதனால் ஐரோப்பிய நாடுகளில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

அந்த வேகத்தில் இந்தியாவில் ஒமைக்ரான் பரவினால் நாள் ஒன்றுக்கு 15 லட்சம் பேர் வரை தொற்றினால் பாதிக்கப்படுவார்கள் என்று நிதி ஆயோக் உறுப்பினர் டாக்டர் வி.கே.பால் எச்சரித்துள்ளார்.

இந்தியாவில் நாள் ஒன்றுக்கு 15 லட்சம் பேர் ஒமைக்ரானால் பாதிக்கப்பட வாய்ப்பு!!

இப்போது கிறிஸ்துமஸ், புத்தாண்டு என்று பண்டிகைக் காலம் வரிசையாக வரவிருப்பதால் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு கடந்த 20 நாட்களாக 10,000த்திற்கும் கீழ் குறைந்துள்ளது என்றாலும் நாம் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும், உலக அளவில் கொரோனா வைரஸ் தொற்று அதிகரிக்கும் நாடுகளில் ஒமைக்ரான் அதிகரித்து வருகிறது என்றும் அவர் கூறியுள்ளார்.

இந்தியாவில் நாள் ஒன்றுக்கு 15 லட்சம் பேர் ஒமைக்ரானால் பாதிக்கப்பட வாய்ப்பு!!

இந்தியாவில் இதுவரை 11 மாநிலங்களில் 113 ஓமைக்ரான் நோயாளிகள் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளனர். இதில் 26 பேருக்கு வெள்ளிக்கிழமையான நேற்று தொற்று ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

newstm.in

Trending News

Latest News

You May Like