1. Home
  2. தமிழ்நாடு

மக்களே கவனம்.. இந்த 15 மாவட்டங்களில் 2 நாள் கொட்டப்போகுது கனமழை..!

மக்களே கவனம்.. இந்த 15 மாவட்டங்களில் 2 நாள் கொட்டப்போகுது கனமழை..!

மத்திய மேற்கு வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக வரும் 7 மற்றும் 8-ம் தேதிகளில் தமிழகத்தின் 15 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 'மத்திய மேற்கு வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுகிறது. இதனால், இன்று முதல் இரண்டு நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மிதமான மழை பெய்யும்.


சென்னையில் வானம் மேக மூட்டமாக காணப்படும். சில இடங்களில் லேசான மழை பெய்யும். வரும் 7 மற்றும் 8-ம் தேதிகளில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பல இடங்களில் மிதமான மழை பெய்யும். கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, அரியலூர், பெரம்பலூர், திருச்சி மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் 7 மற்றும் 8-ம் தேதிகளில் கனமழை பெய்யும்.

நேற்று காலை நிலவரப்படி, கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கோவை ஆனைப்பாளையத்தில் 2 செ.மீ., வேடசந்தூர், சித்தார், காங்கேயத்தில் தலா 1 செ.மீ. மழை பெய்துள்ளது. குமரிக்கடல், மன்னார் வளைகுடா மற்றும் தெற்கு இலங்கையை ஒட்டிய தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் மணிக்கு 50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசும். எனவே, இன்றும், நாளையும் மீனவர்கள் இந்த பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம்' என்று அதில் கூறப்பட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like