1. Home
  2. சினிமா

ரூ.15 கோடியில் மனைவியை பழிவாங்க சினிமா எடுத்த நடிகர்!!

ரூ.15 கோடியில் மனைவியை பழிவாங்க சினிமா எடுத்த நடிகர்!!

பிரபல நடிகர் நரேஷ் எடுத்துள்ள காதல் திரைப்படம் அவரது மனைவியை பழிவாங்க என்று தெலுங்கு சினிமாவில் பரவலாக பேசப்படுகிறது.

தெலுங்கு சினிமாவின் மூத்த நடிகர் நரேஷ், பவித்ரா லோகேஷ் நடிப்பில் மல்லி பெல்லி என்ற திரைப்படம் வரும் 26ஆம் தேதி திரைக்கு வர உள்ளது. இந்தப் படத்தின் டீசரைப் பார்த்தால், நரேஷின் நிஜ வாழ்க்கைக் கதையை அடிப்படையாகக் கொண்டது என்பது தெளிவாகிறது.

நடிகர் நரேஷ், கன்னட நடிகை பவித்ரா லோகேஷை திருமணம் செய்து கொண்டதாக தகவல் பரவியது. ஆனால், அது ஒரு படத்தில் இடம்பெறும் காட்சி என்று பின்னர் சொல்லப்பட்டது.

மைசூரில் ஒரு நட்சத்திர ஹோட்டலில் நரேஷூம், பவித்ராவும் தங்கியிருந்த போது, அவரது 3-வது மனைவி அங்கு சண்டை போட்டது பெரிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது.


ரூ.15 கோடியில் மனைவியை பழிவாங்க சினிமா எடுத்த நடிகர்!!


இந்நிலையில், தற்போது மல்லி பெல்லி என்ற திரைப்படத்தில் நரேஷ் நடித்துள்ளார். இந்த படத்தின் செய்தியாளர் சந்திப்பின்போது, உங்கள் நிஜ வாழ்க்கையை அடிப்படையாக வைத்து படம் எடுக்கப்பட்டுள்ளதா என்று கேள்வி எழுப்பப்பட்டது.

இப்போது சொன்னால் சஸ்பென்ஸ் போய்விடும், படம் பார்த்த பிறகு எல்லா விஷயங்களும் புரியும். இது ஒரு தனித்துவமான படம் என்று கூறினார். இந்தப் படத்தின் மூலம் உங்கள் மூன்றாவது மனைவியைப் பழிவாங்க விரும்புகிறீர்களா என்று கேள்வி எழுப்ப்பட்டது.


ரூ.15 கோடியில் மனைவியை பழிவாங்க சினிமா எடுத்த நடிகர்!!


அதற்கு நரேஷ் சிரித்துக் கொண்டே பழிவாங்குதல் என்றால் கொல்வது, போலீசில் புகார் அளிப்பது , நீதிமன்றத்திற்கு செல்ல வேண்டும், படத்தின் மூலம் எப்படி பழிவாங்க முடியும் என்றார்.

சினிமா என்பது பொழுதுபோக்கு, ரூ. 15 கோடி செலவு செய்து பழிவாங்க முயற்சிக்க முடியாது என்று நரேஷ் கூறினார். நரேஷின் இந்த கருத்து சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

newstm.in

Trending News

Latest News

You May Like