15 வயது மாணவியை மிரட்டி தொடர் பாலியல் வன்கொடுமை செய்த ஹவுஸ் ஓனர் மகன்..!!
சென்னையைச் சேர்ந்த 15 வயது சிறுமியை போதை மருந்து கொண்டுத்து பாலியல் வன்கொடுமை செய்த இளைஞரை காவல்துறையினர் கைது செய்தனர்.
தாம்பரம் அருகேவுள்ள அஸ்தினாபுரத்தைச் சேர்ந்த 15 வயது சிறுமி பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். சில நாட்களுக்கு முன்பு வழக்கம்போல பள்ளிக்குச் சென்றவர், திடீரென பள்ளி வளாகத்தில் மயங்கி விழுந்துள்ளார். இதையடுத்து அவருக்கு முதலுதவி கொடுத்த ஆசிரியைகள், மாணவியிடம் உடல்நலன் குறித்து விசாரித்துள்ளனர்.
அப்போது தான் தனக்கு நேர்ந்த கொடுமையை மாணவிக்கு ஆசிரியைகளிடம் கூறியுள்ளார். தன் வீட்டு உரிமையாளரின் மகன் விக்கி (22) என்பவர், தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறியுள்ளார். உடனடியாக இதுதொடர்பாக காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு, இளைஞர் விக்கி கைது செய்யப்பட்டார்.
அதையடுத்து நடைபெற்ற விசாரணையில், மாணவியிடம் உள்ள அறிமுகத்தை வைத்து, இளைஞர் விக்கி அவரிடம் நெருங்கி பழகியுள்ளார். ஒருமுறை பைக்கில் மாணவியை தன்னுடைய நண்பர் அறைக்கு கூட்டிச் சென்று குளிர்பானம் வாங்கிக் கொடுத்துள்ளார் விக்கி. அதை குடித்த மாணவிக்கு மயக்கநிலை ஏற்பட்டுள்ளது.
அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டு இளைஞர் விக்கி, மாணவியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதுபோல பலமுறை மாணவியிடம் தனிமையாக இருந்து வந்துள்ளார் விக்கி. ஒருமுறை தனக்கு நேர்ந்து வரும் கொடுமை குறித்து தெரியவந்ததை அடுத்து, விக்கியை விட்டு விலக முயன்றுள்ளார் மாணவி. ஆனால் அவரை மிரட்டி தொடர்ந்து தன்னுடைய ஆசைக்கு பயன்படுத்தி வந்துள்ளார் இளைஞர் விக்கி.
இந்நிலையில் விக்கியை கைது செய்துள்ள காவல்துறை, இந்த சம்பவத்தில் அவருடைய நண்பருக்கும் தொடர்ப்பு இருக்குமோ என்கிற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.