1. Home
  2. தமிழ்நாடு

14 வயது சிறுவனுக்கு நிபா வைரஸ் பாதிப்பு உறுதி..!

1

கேரளா  சுகாதார அமைச்சர் வீணா ஜார்ஜ் கூறியதாவது:-

தனியார் மருத்துவமனையில் வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்றுவந்த 14 வயது சிறுவனுக்கு நிபா வைரஸ் பாதிப்பு இருப்பது தெரியவந்தது. புனே தேசிய வைராலஜி இன்ஸ்டிட்யூட் பரிசோதனையில் இது உறுதி செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, கோழிக்கோட்டில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அந்தச் சிறுவன் மாற்றப்பட்டு, அங்கு தனி வாரிடில் சிகிச்சை அளிக்கப்படும். இந்த வைரஸ் பரவல் குறித்து தீவிரமாக ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. சிறுவனுடன் தொடர்பில் இருந்தவர்களிடம் இருந்து சாம்பிள் பெறப்பட்டு, ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

மலப்புரத்தில் நிபா வைரஸ் உறுதி செய்யப்பட்ட நிலையில், சம்பந்தப்பட்ட பகுதியில் உள்ள மக்கள் மாஸ்க் அணிவது உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், சுகாதாரத் துறையினர் தடுப்பு பணிகளில் தீவிரம் காட்ட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like