’149′ என்ற உதவி மைய எண் அறிவிப்பு..!
அரசுப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகள் இயக்கம் தொடர்பாக, பொதுமக்கள் தங்களின் குறைகள் மற்றும் புகார்களைத் தெரிவிக்க கட்டணமில்லா 11 இலக்க உதவி மைய எண் கடந்த மார்ச் 09- ஆம் தேதியில் இருந்து பயன்பாட்டில் உள்ளது.
இந்த 11 இலக்க தொலைபேசி எண்ணை எளிதில் வைத்துக் கொள்ள இயலவில்லை என பொதுமக்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, நவம்பர் 10- ஆம் தேதி முதல் அரசுப் போக்குவரத்துக் கழகம் தொடர்பாக புகார் அளிக்க கட்டணமில்லா மூன்று இலக்க உதவி மைய எண் ‘149’ அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.