1. Home
  2. தமிழ்நாடு

அக்டோபர் 31 வரை 144 தடை உத்தரவு! கேரளாவில் அதிகரிக்கும் கொரோனா தொற்று!

அக்டோபர் 31 வரை 144 தடை உத்தரவு! கேரளாவில் அதிகரிக்கும் கொரோனா தொற்று!


கேரள சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலில், மாநிலத்தில் புதிய உச்சமாக நேற்று ஒரே நாளில் 9,258 பேருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கேரளாவில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 13 ஆயிரத்து 499 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 77 ஆயிரத்து 482 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் மாநிலத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 1 லட்சத்து 35 ஆயிரத்து 144 ஆக அதிகரித்துள்ளது.

அக்டோபர் 31 வரை 144 தடை உத்தரவு! கேரளாவில் அதிகரிக்கும் கொரோனா தொற்று!

ஆனாலும், வைரஸ் தாக்குதலுக்கு நேற்று 20 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் கேரளாவில் கொரோனா தாக்குதலுக்கு பலியானோர் மொத்த எண்ணிக்கை 791 ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில், கேரளாவில் கொரோனா அதிவேகமாக பரவி வரும் நிலையில் இன்று (3.10.2020) முதல் இம்மாத இறுதி வரை (31.10.2020) 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்ட போது போக்குவரத்திற்கு எந்த வித தடையும் விதிக்கப்படவில்லை. ஆனால், பொதுஇடங்களில் 5 பேருக்கு மேல் கூட்டமாக கூட தடைவித்திக்கப்பட்டுள்ளது. நோய் கட்டுப்பாட்டு பகுதியில் கூட்டம் கூட தடை விதிக்கப்பட்டுள்ளது. கடைகள், வங்கிகள், அரசு அலுவலகங்கள் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக கொரோனா தீவிரமாக உள்ள திருவனந்தபுரம், எர்ணாகுளம், கோட்டயம் ஆகிய 3 மாவட்டங்களில் 144 தடை உத்தரவு கடுமையாக பின்பற்றப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

Trending News

Latest News

You May Like