1. Home
  2. தமிழ்நாடு

14 இலங்கை மீனவர்கள் புழல் சிறையில் அடைப்பு..!

11

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக அடிக்கடி தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்து வருகிறது. மேலும் அவர்களுடைய படகுகள், மீன்பிடி வலைகளையும் பறிமுதல் செய்வதால் தமிழக மீனவர்கள் இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க கோரி வலியுறுத்தி வருகின்றனர்.

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்படுவதும், இதே போல் இலங்கை மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இந்திய கடற்படையாலும் கைது செய்யப்பட்டு வருகின்றனர்

இந்த நிலையில் இலங்கையை சேர்ந்த மீனவர்கள் 14 பேர் 5 படகுகளில் எல்லை தாண்டி வந்ததாக இந்திய கடற்படை கைது செய்தது. நாகை கோடியக்கரை அருகே கடலில் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை மீனவர்கள் 14 பேரை இந்திய கடற்படை கைது செய்தது. 5 படகுகளில் வந்த அவர்களை இந்திய கடற்படை கைது செய்து நாகை துறைமுகத்துக்கு அழைத்து வந்தனர்.

கைதான 14 பேரும் வேதாரண்யம் கடலோர காவல் குழும காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டனர்.   இந்நிலையில்  நாகை அருகே எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இந்திய கடலோர காவல் படையால் கைது செய்யப்பட்ட 14 இலங்கை மீனவர்கள், சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். வரும் 31-ம் தேதி வரை அவர்களை நீதிமன்றக் காவலில் வைக்க எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 

Trending News

Latest News

You May Like