1. Home
  2. தமிழ்நாடு

காவல் துறை எச்சரிக்கை..!! இனி 14 நாளில் அபராதம் கட்டாவிட்டால் வாகனம் ஏலம் விடப்படும்..!!

காவல் துறை எச்சரிக்கை..!! இனி 14 நாளில் அபராதம் கட்டாவிட்டால் வாகனம் ஏலம் விடப்படும்..!!

சென்னை மாநகர காவல் எல்லையில் போக்குவரத்து புதிய மோட்டார் வாகன சட்டம் கடந்த 26ம் தேதி நடைமுறைக்கு வந்தது. அதன்படி போக்குவரத்து விதிகளை மீறுபவர்களிடம் புதிய மோட்டார் வாகன சட்டத்தின் படி, குடிபோதையில் வாகனம் ஓட்டினால் ₹10 ஆயிரம் அபராதம், அவருடன் செல்லும் நபருக்கு ₹10 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டு வருகிறது.

அதேபோல், செல்போனில் பேசிக்கொண்டே வாகனம் ஓட்டினால் ரூ1000ம், அதே விதிமீறலில் 2வது முறை ஈடுபடுவோருக்கு ₹10 ஆயிரம் அபராதமும், ஹெல்மெட் மற்றும் சீட் பெல்ட் அணியாவிட்டால் ₹1000 அபராதம் என பல்வேறு விதிமீறல்களுக்கு ₹1000 முதல் ₹10 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.


காவல் துறை எச்சரிக்கை..!! இனி 14 நாளில் அபராதம் கட்டாவிட்டால் வாகனம் ஏலம் விடப்படும்..!!

பொதுவாக போக்குவரத்து விதிகள் மீறும் வாகன ஓட்டிகளுக்கு சம்பவ இடத்திலேயே போலீசார் வழக்கு பதிவு செய்து இ-செலான் மூலம் அபராத தொகைக்கான ரசீதுகள் வழங்குகின்றனர். சிலர் அப்போதே பணத்தை செலுத்துகின்றனர். இன்னும் சிலர், அபராத ரசீதை போலீசாரிடம் பெற்றும் பணத்தை செலுத்துவதில்லை.


காவல் துறை எச்சரிக்கை..!! இனி 14 நாளில் அபராதம் கட்டாவிட்டால் வாகனம் ஏலம் விடப்படும்..!!


காலம் கடத்தி வரும் நபர்களிடம் அபராத தொகையை முழுமையாக வசூலிக்க திருத்தப்பட்ட புதிய மோட்டார் வாகன சட்டத்தில் வழி வகை உள்ளது.ஒருவர் குடிபோதையில் வாகனம் ஓட்டி போலீசார் ₹10 ஆயிரம் அபராதம் விதித்து அதற்கான ரசீதை கொடுத்த 14 நாட்களுக்குள் சம்பந்தப்பட்ட நபர் ஆன்லைன் அல்லது நீதிமன்றத்தில் அபராத தொகை கட்ட வேண்டும். அப்படி கட்டவில்லை என்றால், வழக்கு பதிவு செய்யப்பட்ட நபரின் வாகனம் பறிமுதல் செய்யப்படும். அப்போதும் அபராத தொகை செலுத்த தவறினால், பறிமுதல் செய்யப்பட்ட வாகனத்தை நீதிமன்ற உத்தரவுப்படி பொது ஏலம் விடப்பட்டு நிலுவையில் உள்ள அபராத தொகை முழுமையாக வசூலிக்கப்படும் என்று காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த நடைமுறை தற்போது சென்னை மாநகர காவல்துறையில் அமல்படுத்தப்பட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like