1. Home
  2. தமிழ்நாடு

138 அடியை எட்டியது முல்லைப் பெரியாறு: 2ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை..!

138 அடியை எட்டியது முல்லைப் பெரியாறு: 2ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை..!

முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 138 அடியை எட்டியுள்ளதால், கேரள பகுதிகளுக்கு இரண்டாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. குறிப்பாக, முல்லைப் பெரியாறு அணை பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால், கடந்த சில தினங்களுக்கு முன்பு முதல் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.


இந்த நிலையில், இன்று (நவ.17-ம் தேதி) அணையின் நீர்மட்டம் 138 அடியை எட்டியுள்ளது. இதனால், கேரள பகுதிகளுக்கு இரண்டாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன்று காலை 10 மணி நிலவரப்படி அணைக்கு நீர்வரத்து 1,542 கன அடியாக வந்துகொண்டிருக்கிறது.

ரூல்கர்வ் முறைப்படி, வரும் 20-ம் தேதி வரை அணையின் நீர்மட்டத்தை 141 அடியாக உயர்த்திக் கொள்ளலாம் என்பதால், அதற்கு பிறகு அணைக்கு வரும் நீரானது கேரள பகுதிக்கு திறந்து விடப்படும் நிலை உள்ளது. இதனால், கேரளாவுக்கு இரண்டாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like