தமிழகத்திற்குள் நுழைந்த 130 யானைகள்!

கர்நாடகா வனப்பகுதியிலிருந்து 130 யானைகள் தமிழகப் பகுதிக்குள் நுழைந்துள்ளன என்று வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.இதனால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கவனமாக இருக்க வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் வனக்கோட்டத்துக்கு இரண்டு கூட்டமாக பிரிந்துள்ள இந்த யானைகள் ஜவலகிரி மற்றும் தளி வனப்பகுதிக்குள் வந்துள்ளதாக கூறியுள்ளனர். இவற்றில் 70 யானைகள் தளி வனச்சரகத்திற்குள் தங்கியுள்ளன. இது வழக்கமாக நடக்கும் நிகழ்வு தான், தமிழ்நாட்டில் கேழ்வரகு, கொள்ளு பயிர்கள் பயிரிடப்படும் நேரம் என்பதால் அடுத்த 4 மாதத்திற்கு இங்கே யானைகள் தங்கும்.
தளி மற்றும் ஜவலகிரி பகுதி கிராம மக்கள் காட்டுக்குள் செல்ல வேண்டாம்,இரவு நேர காவலை விவசாயிகள் தவிர்க்க வேண்டும். விவசாய நிலத்தில், தீப்பந்தம் ஏற்றி பாதுகாப்பாக இருக்க வேண்டும், விடிந்த பிறகு வீட்டை விட்டு வெளியே செல்லுங்கள், இருட்டுவதற்கு முன்னதாக வீட்டிற்கு திரும்பிவிடுங்கள் என்றும் ஆடு, மாடு மேய்க்கவோ, விறகு சேகரிக்கவோ காட்டுக்குள் செல்ல வேண்டாம் என, வனத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
newstm.in