வேலைநிறுத்தம் அறிவித்துள்ள மருத்துவர்கள் முன் வைத்துள்ள 13 கோரிக்கைகள்..!
மருத்துவரை கத்தியால் குத்திய சம்பவத்தை கண்டித்து காலவரையற்ற வேலைநிறுத்தம் செய்யப்போவதாக அரசு மருத்துவர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
தங்களுடைய கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றித் தர வேண்டும் என வலியுறுத்தி மருத்துவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
வேலைநிறுத்தம் அறிவித்துள்ள மருத்துவர்கள் 13 கோரிக்கைகளை முன் வைத்துள்ளனர்.
* அரசு மருத்துவமனைகளுக்கு வரும் நோயாளிகள், உடன் வருவோரை முழுமையான சோதனைக்கு பின்னரே உள்ளே அனுமதிக்க வேண்டும்.
* குறிப்பிட்ட நோயாளிகளுக்கு சிறப்பு சிகிச்சை தருமாறு சிபாரிசு செய்வது தவிர்க்கப்பட வேண்டும்.
* அரசு மருத்துவமனைகளில் சிசிடிவியுடன் கூடிய 2 கட்ட பாதுகாப்பு தரப்பட வேண்டும்.
* பணியில் இருக்கும் மருத்துவ அதிகாரி உரிமம் பெற்ற துப்பாக்கி வைத்திருக்க அனுமதிக்க வேண்டும்.
* அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பும் வரை புதிய அரசு மருத்துவமனைகள் திறக்கப்படக்கூடாது என்று தெரிவித்துள்ளனர்.