1. Home
  2. தமிழ்நாடு

சென்னையில் இருந்து 1,220 சிறப்பு பஸ்கள் இயக்கம்..!

Q

சுபமுகூர்த்தம் மற்றும் வார விடுமுறை நாட்களை முன்னிட்டு சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, நெல்லை, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோவை, சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு 31-ந் தேதி (வெள்ளிக்கிழமை) 365 பஸ்களும், பிப்ரவரி 1-ந் தேதி (சனிக்கிழமை) 445 பஸ்களும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. 

சென்னை கோயம்பேட்டில் இருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு 31-ந் தேதி வெள்ளிக் கிழமை 60 பஸ்களும் பிப்ரவரி 1-ந் தேதி சனிக்கிழமை 60 பஸ்களும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், பெங்களூரு, திருப்பூர், ஈரோடு மற்றும் கோவை ஆகிய இடங்களிலிருந்தும் பல்வேறு இடங்களுக்கும் 250 சிறப்பு பஸ்களும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

மாதாவரத்தில் இருந்து 31-ந் தேதி 20 பஸ்களும் பிப்ரவரி 1-ந் தேதி 20 பஸ்களும் சிறப்பு பேருந்துகளாக இயக்கப்படுகிறது. இதேபோன்று, ஞாயிற்றுக்கிழமை சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூரு திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்பு பஸ்கள் இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

Trending News

Latest News

You May Like