1. Home
  2. தமிழ்நாடு

ரூ.122க்கு பதிலாக ரூ.91,000 மின் கட்டணம் வந்ததால் அதிர்ச்சி!!

ரூ.122க்கு பதிலாக ரூ.91,000 மின் கட்டணம் வந்ததால் அதிர்ச்சி!!

நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே துலுக்கர்பட்டி பள்ளிவாசல் தெருவை சேர்ந்த முகமது பாத்து (40) என்பவர் தனது தந்தை உதுமான் கனியுடன் அரசு மானியத்தில் கட்டப்பட்ட பசுமை வீட்டில் வசித்து வருகிறார்.

சில நாட்களுக்கு முன்பு முகமது பாத்து செல்போனுக்கு மின்வாரியத்தில் இருந்து ஒரு குறுந்தகவல் வந்தது. அதில் 2 மாதத்திற்கான மின்கட்டண தொகை 91 ஆயிரத்து 139 ரூபாய் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

மேலும் வருகிற 5ஆம் தேதி கட்டணம் செலுத்த கடைசி நாள் என்றும் குறிப்பிடப்பட்டு இருந்தது. இதனை பார்த்த முகமது பாத்து அதிர்ச்சியில் உறைந்து போனார். இதுகுறித்து அவர் நாங்குநேரி மின்வாரிய அலுவலகத்திற்கு சென்று முறையிட்டார்.


ரூ.122க்கு பதிலாக ரூ.91,000 மின் கட்டணம் வந்ததால் அதிர்ச்சி!!

வழக்கமாக தனது வீட்டிற்கு ரூ.65 மட்டுமே மின்கட்டணம் வரும் என்றும் அப்படி இருக்கும் போது ரூ.91 ஆயிரத்து 139 மின்கட்டணம் எப்படி வரும் என்று அதிகாரிகளிடம் கேட்டுள்ளார்.

தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த தவறு ஏற்பட்டிருக்கலாம் என்றும் 2 நாட்களில் உண்மையான கட்டண ரசீது வந்துவிடும் என்று மின்வாரிய அதிகாரிகள் கூறினர்.

அதனைத் தொடர்ந்து முகமது பாத்து செல்போன் எண்ணுக்கு புதிய கட்டணம் குறித்து குறுந்தகவல் அனுப்பப்பட்டது. அதில் மின்கட்டணம் ரூ.122 என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. அதை பார்த்த பின்னரே முகமது பாத்து நிம்மதி அடைந்தார்.

newstm.in

Trending News

Latest News

You May Like