1. Home
  2. தமிழ்நாடு

122 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு பெய்த மழையால் மூழ்கிய கிராமம்..!!

122 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு பெய்த மழையால் மூழ்கிய கிராமம்..!!

கடந்த மாதம் 29-ம் தேதி தொடங்கிய வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. இதன் காரணமாக தமிழ்நாடு முழுவதும் கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


122 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு பெய்த மழையால் மூழ்கிய கிராமம்..!!

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதாகவும், 6 இடங்களில் அதிகனமழை பெய்துள்ளதாகவும், 16 இடங்களில் மிக கனமழை பெய்துள்ளதாகவும், 108 இடங்களில் கனமழை பெய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீர்காழியில் 122 ஆண்டுகளில் இதுவரை இல்லாத அளவாக ஒரே நாளில் 44 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளதாகவும், இந்த மழைக்கு மேக வெடிப்பு ( Cloud Burst) காரணம் அல்ல எனவும் கூறப்பட்டுள்ளது.



தமிழ்நாட்டில் இன்று பரவலாக மழை பெய்யும் என்றும், 14 மற்றும் 15-ம் தேதிகளில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.


Trending News

Latest News

You May Like