1200 கி.மீ. தூரம் சேஸ் செய்து போலி ஐபிஎஸ் அதிகாரியை கைது செய்த போலீஸ்!

ஐபிஎஸ் அதிகாரி போல் நடித்து பலரை ஏமாற்றிய நபரை மும்பை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
ஐபிஎஸ் அதிகாரி போல நடித்து சூரத் தொழிலதிபரை கடத்தி, 16 லட்ச ரூபாய் வசூலித்த ராஜஸ்தான் மோசடி பேர்வழியை மும்பை போலீசார் கைது செய்துள்ளனர்.
குஜராத்திலிருந்து பெங்களூரு வரை 1200 கிலோமீட்டர் தூரம் சாலைவழியாகவே காரில் துரத்தி இவரை மும்பை காவல்துறை கைது செய்துள்ளது.
மூத்த ஐ.பி.எஸ் அதிகாரியாக காட்டிக்கொண்டு பெரிய தொழிலதிபர்களிடமிருந்து பணம் பறிக்கும் இந்த நபர், ராஜஸ்தானின் அஜ்மீர் மாவட்டத்திலுள்ள பியாவரில் வசிக்கும் 38 வயதான சிவசங்கர் சர்மா என அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டது.
ஆடை ஏற்றுமதி வியாபாரத்தில் ஈடுபட்டுள்ள சூரத்தை சேர்ந்த முகமது அஸ்லம் நவிவாலாவின் புகாரின் பேரில் சர்மா தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.
சில வாரங்களுக்கு முன்பாக நவிவாலாவுக்கு போன் செய்து ஐபிஎஸ் அதிகாரி போல பேசிய சிவசங்கர் சர்மா, சுங்க ஏற்றுமதி விதிமீறல்கள் குறித்து பேச அழைத்து கடத்தி மிரட்டி 16 லட்ச ரூபாய் பணம் பறித்துள்ளார்.
இது தொடர்பான புகாரின் பேரில் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து, 24 மணி நேரம் காரில் தொடர்ந்து துரத்தி சர்மாவை மும்பை போலீஸ் கைது செய்தது.
newstm.in