12 இளம் கதை சொல்லிகளை கண்டறிந்த டெய்லி ஹன்ட், ஏஎம்ஜி மீடியா!!
உள்ளூர் செய்திகள் அடங்கிய இந்தியாவின் முதல் இணையதளமான டெய்லி ஹன்ட், ஏஎம்ஜி மீடியா நெட்வொர்க்ஸ் ஆகிய இரண்டு நிறுவனங்களும் இணைந்து ஸ்டோரி ஃபார் குளோரி #StoryForGlory என்ற பெயரில் அறிவுத்தேடல் நிகழ்ச்சியை நடத்தின. ஏஎம்ஜி மீடியா நெட்வொர்க்ஸ் லிமிடெட் அதானி குழுமத்தால் நிர்வகிக்கப்படுகிறது.
தேசிய அளவில் தேர்வு செய்யப்பட்ட கதைசொல்லிகளுக்கான இறுதி தேர்வு நிகழ்ச்சி டெல்லியில் நடைபெற்றது. அதில் வீடியோ மற்றும் அச்சு என இரண்டு பிரிவுகளில் 12 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நிகழ்ச்சி கடந்த மே மாதம் தொடங்கப்பட்டது. 1000 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில் அதில் வெறும் 20 பேர் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கான இரண்டு மாத ஃபெல்லோஷிப் பயிற்சி முன்னணி ஊடக நிறுவனமான மைகாவில் (MICA) நடத்தப்பட்டது.
அங்கு 20 பேருக்கும் தீவிர பயிற்சி அளிக்கப்பட்டது. நீண்ட பயிற்சிக்கு பிறகு எட்டு வார காலம், இறுதி பாடத்திட்டத்தில் பணியாற்றினர். அவர்களுக்கு முன்னணி செய்தி நிறுவனங்களில் பொறுப்பில் இருப்போர் வழிகாட்டியாக இருந்தனர்.
பயிற்சியும் போது அனைவரும் தங்கள் திறமையை வளர்த்துக் கொள்வதிலும், புதிய விஷயங்களை கற்றுக் கொள்வதிலும் ஆர்வம் காட்டினர். மேலும் கதை சொல்லும் விதத்தை மேம்படுத்திக் கொள்வதிலும் பயிற்சி பெற்றனர்.
பின்னர் 20 பேரும் தங்களது இறுதி புராஜெக்டை சமர்ப்பித்தனர். தேர்வு செய்யும் குழுவில் டெய்லி ஹன்ட் நிறுவனர் வீரேந்திர குப்தா, ஏஎம்ஜி சிஇஓ சஞ்சய் புகாலியா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த திட்டம் இந்தியாவில் உள்ள தலைசிறந்த கதை சொல்லிகளை, சமூக அக்கறை உள்ளவர்களை வீடியோ அல்லது எழுத்து மூலமாக கண்டறிவதற்காக தொடங்கப்பட்டது. 10 லட்சம் பார்வையாளர்களை தினமும் கடக்கும் டெய்லி ஹன்ட் மிகச்சிறந்த செய்தி இணையமாக செயல்பட்டு வருகிறது.
பயிற்சியில் கலந்து கொண்ட 20 பேரில் 12 பேர் வெற்றி பெற்றுள்ளனர். அவர்களுக்கு ஜூரி குழுவினர் சான்றிதழ் வழங்கி சிறப்பித்தனர். தற்போதைய நிலவரப்படி டிஜிட்டல் ஊடகம் எல்லோரையும் விரைவில் சென்றடைந்துவிடுகிறது.
மாதத்திற்கு 350 மில்லியன் பயனாளர்கள் டெய்லி ஹண்டில் உள்ள நிலையில் அவர்களுக்கு உரிய சேவை கிடைக்க ஆயத்தமாக இருப்பது என்று டெய்லி ஹன்ட் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
newstm.in