முருகனின் அருள் கிடைக்க 12 ராசிக்காரர்களும் தினமும் சொல்ல வேண்டிய மந்திரம்..!

முருகப் பெருமான் ஆறு திருமுகங்களையும், பன்னிரு திருக்கரங்களையும் உடையவர். அதனால் இவருக்குள் 27 நட்சத்திரங்களும், அந்த 27 நட்சத்திரங்களுக்குள் 12 ராசிகளும் அடக்கம் என்பார்கள். அதனால் தான் எந்த வினையாக இருந்தாலும் கந்தனின் திருவடிகளை பற்றி, சரணடைந்தால் அவர்களுக்கு ஏற்படும் எந்த பிரச்சனையாக இருந்தாலும் நீங்கி விடும் என சொல்லப்படுகிறது.
12 ராசிக்காரர்களும் அவரவர் ராசிக்குரிய முருக மந்திரங்களை தினமும் 6, 12, 21, 27, 54, 108 என்ற எண்ணிக்கைகளில் தினமும் சொல்லி வந்தால் முருகப் பெருமானின் அருளும், அனைத்து நலன்களும் கிடைக்கும். வேண்டுதல்கள் எளிதில் நிறைவேறும். இந்த மந்திரங்களை நெய் விளக்கேற்றி வைத்து செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளிலும், முருகன் சன்னதியிலும் அமர்ந்து சொல்வது சிறப்பு. சஷ்டி, கிருத்திகை, விசாகம், உத்திரம் ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்களில் இந்த மந்திரத்தை சொல்ல துவங்குவது மிகவும் விசேஷமானதாகும்.
இந்த மந்திரங்களை சொல்லுவதற்கு நேரம், காலம் என எதுவும் கிடையாது. உங்களுக்கு எப்போது எல்லாம் நேரம் கிடைக்கிறதோ, அப்போது எல்லாம் சொல்லலாம். எத்தனை முறை முடியுமோ அத்தனை முறை சொல்லலாம். காலை, இரவு நேரங்களிலும், பயணத்தின் போதும், நடக்கும் போதும் கூட உந்த மந்திரங்களை மனதிற்குள் உச்சரித்துக் கொண்டே இருப்பது சிறப்பு. இதனால் வரும் ஆபத்துக்கள், துன்பங்களில் இருந்து காப்பாற்றப்படுவீர்கள்.
12 ராசிகளுக்கான முருகன் மந்திரங்கள் :
மேஷம் - ஓம் ஷண்முகா போற்றி
ரிஷபம் - ஓம் கதிர்வேலா போற்றி
மிதுனம் - ஓம் முருகா போற்றி
கடகம் - ஓம் குகனே போற்றி
சிம்மம் - ஓம் மயில் வாகனனே போற்றி
கன்னி - ஓம் கார்த்திகை மைந்தா போற்றி
துலாம் - ஓம் குமார வேலவா போற்றி
விருச்சிகம் - ஓம் சேவற்கொடியோனே போற்றி
தனுசு - ஓம் தண்டாயுதபாணியே போற்றி
மகரம் - ஓம் சுப்ரமண்யா போற்றி
கும்பம் - ஓம் திருப்புகழ் பெற்ற தெய்வமே போற்றி
மீனம் - ஓம் சூரனை வென்ற குமாரா போற்றி