12 வயது சிறுமியிடம் பாலியல் தொல்லை... 53 வயது முதியவர் கைது !

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி எல்லையில் அமைந்துள்ள ராதாபுரத்தைச் சேர்ந்த 53 வயது முதியவர் ஒருவர் அப்பகுதியில் தையல்கடை நடத்தி வந்துள்ளார்.
இவர் வாடிக்கையாளர்களை சந்திப்பதற்காக அருகில் இருக்கும் ஜவுளிக்கடைக்கு அடிக்கடி சென்று வருவார். அப்படி செல்லும்போது தான் முதியவர் தனது பாலியல் சேட்டையை காட்டியுள்ளார்.
கடந்த செப்டம்பர் 29 ஆம் தேதி 12 வது சிறுமி ஒருவருடன், அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் ஜவுளி கடைக்கு வந்துள்ளனர்.
அப்போது அங்கு வந்திருந்த முதியவர் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். அதாவது சிறுமியின் தனிப்பட்ட பகுதிகளை தொட்டு பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமி, முதியவரின் செயலை பெற்றோரிடம் கூறி அழுதுள்ளார். பின்னர் சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் அங்கு சென்ற போலீசார் தையல்காரர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
newstm.in