கோவை மாநகரின் இந்த இடத்தில் 12 சிறப்பு நீதிமன்றங்கள் உருவாகிறது..!

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள குதிரை வண்டி கோர்ட் வளாகத்தில் புதிதாக 12 சிறப்பு நீதிமன்றங்கள் மற்றும் 2 சாட்சி கூடங்கள் அமைகிறது. ரூ.54 கோடி மதிப்பீட்டில் அமையும் இந்த திட்டத்திற்கான பணிகளுக்கு கோவை மாவட்ட முதன்மை நீதிபதி விஜயா அண்மையில் அடிக்கல் நாட்டினார்.
இந்த நிகழ்வில் கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் மற்றும் மூத்த வழக்கறிஞர்கள் பலர் கலந்து கொண்டனர்.
ஏன் இது குதிரை வண்டி கோர்ட் என அழைக்கப்படுகிறது?
'குதிரை வண்டி' கோர்ட் வளாகம் 1860களில் ஆங்கிலேயர் ஆட்சியின் போது கட்டப்பட்டது. இந்த வளாகத்திற்குள் நீதிமன்றங்கள் இயங்கி வந்தன. இங்கு, முறையான அனுமதி இல்லாமலும் விளக்குகள் இல்லாமலும் இயக்கப்பட்ட குதிரை வண்டிகள் மேல் வழக்கு பதியப்பட்டு விசாரணைக்கு நிறுத்திவைக்கப்பட்டதால் இதற்கு நாளடைவில் குதிரை வண்டி நீதிமன்றம் என பெயர் வந்ததாக கூறுவர்.