ரயிலில் இருந்து குதித்த 12 பயணிகள்..எதற்க்கு தெரியுமா?
உ.பி., மாநிலம் பில்புர் பகுதியில் உள்ள ரயில் நிலையத்திற்கு ஹவுரா அம்ரித்சர் எக்ஸ்பிரஸ் ரயில் வந்து நின்றது. சிறிது நேரத்தில் புறப்பட துவங்கிய உடன் ஜெனரல் கம்பார்ட்மென்ட்டில் இருந்து தீயை கட்டுப்படுத்தும் கருவியை இயக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதன்காரணமாக புகை போன்று வந்ததை கண்டு பயந்த பயணிகள் ரயிலை நிறுத்தக்கூடிய அலார சங்கிலியை பிடித்து இழுத்தனர் . இருப்பினும் ஒரு சிலர் உயிரை காப்பாற்றிக் கொள்ளும் எண்ணத்தில் வடிவேல் பாணியில் குதிச்சிருடா கைப்புள்ளையாக மாறி ரயிலில் இருந்து கீழே தாவினர்.
இச்சம்பவத்தில் 12 பேர் காயம் அடைந்தனர். ரயில்வே துறையினர் நடத்திய விசாரணையில் பயணிகளில் ஒருவர் தீயை அணைக்க கூடிய கருவியை இயக்கியது தெரிய வந்தது. தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.