எரிவாயு பைப்லைன் வெடித்த விபத்தில் 12 பேர் உயிரிழப்பு!!

பாகிஸ்தானில் எரிவாயு பைப்லைன் வெடித்த அதிபயங்கர விபத்தில் 12 பேர் பலியாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கராச்சி நகரின் ஷேர்சா பகுதியில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. வெடி விபத்துக்கான காரணம் கழிவுநீரில் ஏற்பட்ட மீத்தேன் வாயு கசிவா அல்லது பாதாள சாக்கடையை ஒட்டியபடி அமைக்கப்பட்டிருந்த எரிவாயு குழாயா என்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பாதாள சாக்கடைக்கு மேல் இருந்த வங்கி கட்டடம் இந்த வெடி விபத்தில் பாதிக்கப்பட்டுள்ளது. கட்டட இடிபாடுகளில் யாரேனும் சிக்கி உள்ளார்களா என்று மீட்புப் பணியினர் தொடர்ந்து தீவிரம் காட்டி வருகின்றனர்.
விபத்து ஏற்பட காரணம் என்ன என்பது குறித்த விசாரணை நடைபெற்று வருவதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முழுமையான காரணம் தற்போது தெரியவராது என்றும் கூறியுள்ளனர்.
இந்த கோர விபத்தில் 12 பேர் உயிரிழந்ததாக கூறப்படும் நிலையில், 12 பேர் பலத்த காயமம் அடைந்துள்ளதாகவும் தெரிகிறது.
newstm.in