உங்கள் வாழ்க்கையை வளமாக்கிக் கொள்ள 12 ராசிக்காரர்களும் வணங்க வேண்டிய தெய்வங்கள்..!
12 ராசிக்காரர்களும் என்ன என்ன தெய்வங்களை வணங்கும் பொழுது நன்மைகள் அதிகரிக்கும் என்பதை விரிவாக விளக்கக் கூடியது இந்த பதிவு.
மேஷம் :
செவ்வாயை அதிபதியாகக் கொண்ட மேஷ ராசி நேயர்கள் முருகப்பெருமானை வழிபடுவது சிறப்பு இது ஓரளவுக்கு ஜோதிடம் தெரிந்த அனைவருக்கும் தெரிந்த செய்திதான்.ஆனாலும் ஜோதிடத்தில் மேஷம் என்பது நெருப்பை குறிக்கக்கூடிய ராசி. அதைப்போல நிலப்பரப்பில் மலையை குறிக்கக்கூடிய ராசி ஆக முருகப்பெருமானை வழிபடலாம் என்று சொன்னாலும் பழனி முருகனையும் திருத்தணி முருகனையும் சுவாமிமலை முருகனையும் மேஷ ராசியினர்கள் வழிபடுவது மிகவும் நல்ல பலன்களைத் தரும்.
ரிஷபம் :
புதனை அதிபதியாகக் கொண்ட மிதுன ராசி நேயர்கள் பெருமாளை ஏதாவது நாராயண பெருமாளை வழிபடுவது மிகவும் சிறப்பு அதிலும் குறிப்பாக திருப்பதி ஏழுமலையான் தரிசனம் செய்து வருவது மிகவும் நல்ல பலன்களை மிதுன ராசி நேயர்களுக்கு எடுத்து செய்யும்.
கடகம் :
சந்திரனை அதிபதியாகக் கொண்ட கடக ராசி நேயர்கள் காஞ்சி காமாட்சி அம்மனை வழிபடுவது சிறப்பு.
அதேபோல் அம்மாவாசை மற்றும் பௌர்ணமி தினங்கள் தினங்களில் ஏதாவது ஒரு பெண் தெய்வ வழிபாடு அல்லது துர்க்கை வழிபாடு செய்து கொள்வதும் சிறப்பு.
சிம்மம் :
சூரியனை அதிபதியாகக் கொண்ட சிம்ம ராசி நேயர்கள் சிவபெருமானை வழிபடுவது மிகவும் நல்ல பலன்களைத் தரும் அடிக்கடி திருவண்ணாமலை சென்று கிரிவலம் செய்து வருவதும் சிம்ம ராசி நேயர்களுக்கு வாழ்வில் மிகப்பெரிய முன்னேற்றங்களை எடுத்து செய்யும்.
கன்னி :
புதனை அதிபதியாகக் கொண்ட கன்னிராசி நேயர்கள் ஸ்ரீரங்கம் ரங்கநாதரை வழிபடுவது சிறப்பு.
அதுமட்டுமில்லாமல் கும்பகோணம் மகாமக குளம் சென்று சிவனை நினைத்து வழிபாடு செய்வதும் சிறப்பு.
துலாம் :
சுக்கிரனை அதிபதியாகக் கொண்ட துலாம் ராசி நேயர்கள் பகவதி அம்மன் வழிபாடு செய்வதும் மதுரை மீனாட்சி அம்மன் வழிபாடு செய்வதும் சிறப்பு.
விருச்சிகம் :
செவ்வாயை அதிபதியாகக் கொண்ட விருச்சிக ராசி நேயர்கள் முருகப்பெருமானை வழிபடுவது சிறப்பு.
அதிலும் குறிப்பாக திருச்செந்தூர் முருகனை வழிபடுவது விருச்சிக ராசி நேயர்களுக்கு பலனை அதிகப்படுத்தி தரும்.
தனுசு :
குருவை அதிபதியாகக் கொண்ட தனுசு ராசி நேயர்கள் தட்சிணாமூர்த்தி வழிபாடு செய்வது நல்ல பலன்களை தரும் அதுபோலவே விநாயகர் வழிபாடும் தனுசு ராசி நேயர்களுக்கு மேம்பட்ட பலன்களை எடுத்து செய்யும்.
மகரம், கும்பம் :
சனியை அதிபதியாகக் கொண்ட மகரம் கும்ப ராசி நேயர்கள் காலபைரவர் வழிபாடு செய்வதும் சனிக்கிழமைகளில் பெருமாள் வழிபாடு செய்வதும் சனி பகவானை சனிக்கிழமை சென்று தரிசிப்பதும் சனிக்கிழமை விரதம் பிடிப்பதும் பலன்கள் சற்று கடுமையாக இருந்தால் கூட குறைத்து நல்ல பலன்கள் கிடைக்க வழி செய்யும்
மீனம் :
குருவை அதிபதியாகக் கொண்ட மீன ராசி நேயர்கள், மதுரை மீனாட்சி அம்மன் வழிபாடு ஸ்ரீரங்கம் ரங்கநாதர் வழிபாடு விநாயகர் வழிபாடு போன்றவை செய்வது நல்ல பலன்களை அதிகம் கிடைக்கும்.