1. Home
  2. தமிழ்நாடு

அதிர்ச்சி! சிறுமிக்கு 12 மணி நேரம் பாலியல் வன்கொடுமை!!

அதிர்ச்சி! சிறுமிக்கு 12 மணி நேரம் பாலியல் வன்கொடுமை!!

16 வயது சிறுமி 8 பேரால் 14 மணி நேரம் தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் பல்கர் மாவட்டத்தில் தான் இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது. வெள்ளிக்கிழமை இரவு சிறுமியை ஆட்கள் இல்லாத பங்களாவிற்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

அதன்பிறகு கடற்கரை பகுதிக்கு அழைத்துச் சென்று அங்கு வைத்தும் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இதனையடுத்து சனிக்கிழமை பாதிக்கப்பட்ட சிறுமி சத்பதி காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.


அதிர்ச்சி! சிறுமிக்கு 12 மணி நேரம் பாலியல் வன்கொடுமை!!

வெள்ளிக்கிழமை இரவு 8 மணி முதல், சனிக்கிழமை காலை 10 மணி வரை தன்னை 8 பேரும் பாலியல் வன்கொடுமை செய்ததாக சிறுமி தனது புகாரில் தெரிவித்துள்ளார். புகாரை தொடர்ந்து இன்று காலை 8 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

newstm.in

Trending News

Latest News

You May Like