1. Home
  2. தமிழ்நாடு

வரும் நவ.12-ல் இமாச்சல பிரதேசத்தில் சட்டசபை தேர்தல்...!

வரும் நவ.12-ல் இமாச்சல பிரதேசத்தில் சட்டசபை தேர்தல்...!

தேர்தல் தேதி அட்டவணையை டெல்லியில் தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் அறிவித்தார். இமாச்சல பிரதேச மாநிலத்தில் நவம்பர் 12-ம் தேதி சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறும்.இமாச்சல பிரதேச சட்டமன்ற தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் அக்டோபர் 17ல் தொடங்குகிறது. அக்டோபர் 25ம் தேதி வேட்புமனுத் தாக்கல் நிறைவுபெறுகிறது. வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை அக்டோபர் 27ம் தேதி நடக்கும். வேட்புமனுவை திரும்பபெற அக்டோபர் 29ம் தேதி கடைசி நாள். பதிவான வாக்குகள் டிசம்பர் 8ம் தேதி எண்ணப்படும்.

50 வயதுக்கு மேற்பட்டோர், மாற்றுத்திறனாளிகள் தபால் மூலம் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வாக்குச்சாவடிக்கு வர இயலாதவர்களின் வீடுகளுக்கே சென்று வாக்குகளை பெற்றுவர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வீடுகளுக்கே சென்று ஓட்டு பெற்றுவரும் நடவடிக்கைகளை அனைத்தும் வீடியோ பதிவு செய்யப்படும் என தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தெரிவித்திருக்கிறார்.

Trending News

Latest News

You May Like