1. Home
  2. தமிழ்நாடு

ஜூன் மாதத்தில் வங்கிக்கு 12 நாட்கள் விடுமுறை..!! பணிகளை திட்டமிட்டுக்கோங்க!!

ஜூன் மாதத்தில் வங்கிக்கு 12 நாட்கள் விடுமுறை..!! பணிகளை திட்டமிட்டுக்கோங்க!!

வங்கிகளுக்கு ஒவ்வொரு மாதமும் எந்தெந்த நாட்கள் விடுமுறை என்பது குறித்தான அறிவிப்பையும் ரிசர்வ் வங்கி தான் அறிவிக்கிறது. வழக்கமாக ஒவ்வொரு மாதமும் வங்கிகளுக்கு விடப்படும் விடுமுறைகளை ரிசர்வ் வங்கி அந்த மாதம் துவக்கத்திலேயே அறிவிப்பது வழக்கம் ஆகும்.

பொதுமக்கள் தங்களது வரவு - செலவு கணக்கு, பணத்தை டெபாசிட் செய்வது, எடுப்பது, லோன் உள்ளிட்ட தேவைகளுக்காக வங்கிகளை நாடி வருகின்றனர். எனினும் வங்கி பணி நாட்கள் எது என்று தெரியாமல் விடுமுறை நாட்களில் வங்கிக்கு சென்று திரும்புவதும் நடைபெறுகிறது. இதனால், வங்கி விடுமுறை நாட்களை ரிசர்வ் வங்கி முன்கூட்டியே அறிவித்து வருகிறது.

அந்த வகையில் பொது விடுமுறை, வார இறுதி விடுமுறை, பண்டிகை கால விடுமுறை என மாதந்தோறும் பல நாட்களுக்கு வங்கிகள் அடைக்கப்பட்டிருக்கும். இந்த விடுமுறைகள் அனைத்தும் ஒவ்வொரு மாநிலத்துக்கும் வேறுபடுவது உண்டு. ஜூன் மாதத்தில் சுமார் 12 நாட்களுக்கு வங்கிகள் அடைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஜூன் மாதத்தில் வங்கிக்கு 12 நாட்கள் விடுமுறை..!! பணிகளை திட்டமிட்டுக்கோங்க!!

ஜூன் மாத வங்கி விடுமுறை பட்டியல்:

ஜூன் 4, 2023 - ஞாயிற்றுக்கிழமை

ஜூன் 10, 2023 - சனிக்கிழமை - இரண்டாவது சனிக்கிழமை

ஜூன் 11, 2023 - ஞாயிற்றுக்கிழமை

ஜூன் 15, 2023 - வியாழக்கிழமை - ராஜ சக்ராந்தி (மிசோரம் மற்றும் ஒடிசா)

ஜூன் 18, 2023 - ஞாயிற்றுக்கிழமை

ஜூன் 20, 2023 - செவ்வாய்க்கிழமை - ரத யாத்திரை (ஒடிசா மற்றும் மணிப்பூர்)

ஜூன் 24, 2023 - சனிக்கிழமை - 4வது சனிக்கிழமை

ஜூன் 25, 2023 - ஞாயிற்றுக்கிழமை

ஜூன் 26, 2023 - திங்கட்கிழமை - கர்ச்சி பூஜை (திரிபுரா)

ஜூன் 28, 2023 - புதன்கிழமை - ஈத் உல்-அஷா (மகாராஷ்டிரா, ஜம்மு காஷ்மீர் மற்றும் கேரளா)

ஜூன் 29, 2023 - வியாழக்கிழமை - ஈத் உல்-அஷா

ஜூன் 30, 2023 - வெள்ளிக்கிழமை - ரீமா ஈத் உல்-அஷா



Trending News

Latest News

You May Like