கள்ளச்சாராய உயிரிழப்பு 12-ஆக உயர்வு!!
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 12-ஆக அதிகரித்துள்ளது.
வம்பா மேடு பகுதியில் விற்பனை செய்யப்பட்ட கள்ளச்சாராயத்தை வாங்கிக் குடித்தவர்கள், வீட்டிற்கு சென்றதும் மயங்கி விழுந்தனர். உறவினர்கள் அவர்களை மருத்துவமனையில் அனுமதித்தனர்.
தகவலறிந்து வந்த காவல்துறையினர், அந்த பகுதியில் சோதனை நடத்திய போது, சாராயம் குடித்துவிட்டு மயக்க நிலையில் இருந்த மேலும் பலரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கடற்கரையோரம் யாராவது மயங்கி உள்ளனரா என காவல்துறையினரும், பொதுமக்களும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு, மேலும் சிலரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
கள்ளச்சாராயம் விற்பனை தொடர்பாக, ஐந்து பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு அமரன் என்பவர் கைது செய்யப்பட்டார். நேற்று வரை 7 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில், தற்போது பலி எண்ணிக்கை 12ஆக அதிகரித்துள்ளது.
இந்நிலையில், விழுப்புரம் எஸ்.பி ஸ்ரீநாதா, செங்கல்பட்டு எஸ்.பி. பிரதீப் ஆகியோர் அதிரடியாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அதே போல், விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்ட மதுவிலக்கு பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர்களும் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்னர்.
newstm.in
.png)