1. Home
  2. தமிழ்நாடு

12 ஆண்டுகளுக்கு பிறகு நாளை திறக்கப்படும் டவர்!!

12 ஆண்டுகளுக்கு பிறகு நாளை திறக்கப்படும் டவர்!!

சென்னை அண்ணா நகர் டவர் 12 ஆண்டுகளுக்கு பிறகு நாளை திறக்கப்படுகிறது.

அண்ணாநகரின் முக்கிய அடையாளமாக திகழும் இந்த டவர் பூங்கா மீது பொதுமக்கள் ஏறிச்சென்று சென்னை மாநகரின் நகரின் இயற்கை அழகை ரசித்து வந்தனர். மக்களின் விருப்பமான இடங்களில் ஒன்றாக உள்ளது இந்த டவர்.

இந்நிலையில், காதல் தோல்வி அடைந்த ஒரு சில காதலர்கள் டவரில் ஏறி கீழே குதித்து தற்கொலை செய்த சம்பவங்கள் நிகழ்ந்தது. இதையடுத்து, கடந்த 2011ஆம் ஆண்டு முதல் கோபுரத்தின் மேல் ஏறிச்செல்ல பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டது.


12 ஆண்டுகளுக்கு பிறகு நாளை திறக்கப்படும் டவர்!!


12 ஆண்டுகளாக மக்கள் கோபுரத்தின் மேலே செல்ல அனுமதிக்க மறுக்கப்பட்டது. இந்நிலையில், பூங்காவுக்கு வரும் மக்கள் நவீன பாதுகாப்பு அம்சங்களுடன் இந்த கோபுரம் மற்றும் பூங்காவை சீரமைத்து தர வேண்டும் என்று சென்னை மாநகராட்சிக்கு கோரிக்கை விடுத்தனர்.

அவர்களின் கோரிக்கையை ஏற்று மாநகராட்சி சார்பில் ரூ.30 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு கோபுரம் நவீன பாதுகாப்பு வசதிகளுடன் சீரமைக்கப்பட்டு வந்தது. கோபுரத்தின் பக்கவாட்டு பகுதிகள் அனைத்திலும் தடுப்பு கம்பிகள் மற்றும் இரும்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளது.


கோபுரத்தின் மேலே ஏறிச்செல்லும் போது கீழே தடுமாறி விழுந்திடாத வகையில் இவை அமைக்கப்பட்டு இருக்கிறது. கோபுரத்தின் தடுப்பு சுவர் மற்றும் தூண்களில் தமிழ்நாட்டின் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையிலான ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன.

தற்போது பூங்காவில் கோபுர பணிகள் அனைத்தும் முடிந்துள்ள நிலையில் நாளை இந்த கோபுரம் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு திறக்கப்பட உள்ளது.

newstm.in

Trending News

Latest News

You May Like