1. Home
  2. தமிழ்நாடு

கொடி நாள் நிதிக்கு ரூ.1000 நன்கொடை வழங்கிய 11 மாத குழந்தை..!

1

ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 7ம் தேதி  இந்திய முப்படை வீரர்களின் அரும்பணிகளையும், தியாகத்தையும் போற்றும் வகையில் கொடி நாளாக கடைபிடிக்கப்படுகிறது.

இந்த நன்நாளையொட்டி கோவை  மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், கலெக்டர் கிராந்தி குமார் பாடியிடம்   கொடி நாள் நிதிக்கு கோவை காந்திமாநகர் பகுதியை சேர்ந்த பழனிச்சாமி என்பவற்றின் 11 மாத குழந்தை ரூ.1000 யை நன்கொடை வழங்கியுள்ளது கலெக்டர் மற்றும் பொது மக்களின் வாழ்த்தை பெற்றுள்ளது.

கோவையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஆர்.எஸ். புரம் பகுதியில் உள்ள பிரபல ராவ் மருத்துவமனையில் குழந்தைகளுக்கான பல்வேறு போட்டிகள் நடைபெற்றுள்ளது.

இந்நிலையில் இங்கு கோவை காந்திமாநகர் பகுதியை சேர்ந்த T.பழனிச்சாமி - M.கிருத்திகா தம்பதியின் மகள்கள் P.K. பிரணவிக்கா , P.K. கயல்கன்னி ஆகியோரும் அவர்களின் 11 மாத ஆண் குழந்தை P.K. அம்பேத்கரும் அங்கு நடைபெறும் விளையாட்டு போட்டியில் பங்கேற்றுள்ளனர். இதில் குழந்தை P.K. அம்பேத்கர் 9 மாதம் முதல் 1 ஆண்டு வயதுடைய குழந்தைகளுக்கு தவழும் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் P.K. அம்பேத்கர் முதல் பரிசாக ரூ.1000த்தை பரிசாக பெற்றான். 

இந்நிலையில் இந்த பரிசு தொகையை கொடி நாள் அன்று நிதியாக வழங்க அம்பேத்கரின் சகோதரிகள் பிரியப்பட்டு அவர்களின் பெற்றோரிடம் கேட்டுக்கொண்டனர்.

நிச்சயமாக இதை செய்யலாம் என கூறி பழனிச்சாமி - கிருத்திகா தம்பதி முடிவு செய்து இன்று கோவை கலெக்டர் அலுவகத்திற்கு வந்து ரூ.1000திற்கான டிமாண்ட் டிராப்ட்-டை தங்கள் குழந்தைகளுடன் சேர்ந்து கோவை மாநகராட்சி சிவகுரு பிரபாகரன் முன்னிலையில் வழங்கினர்.

2024 ஜனவரி மாதத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை மற்றும் தென்மாவட்டங்களுக்கு உதவிட முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு இதே P.K. பிரணவிக்கா, P.K. கயல்கன்னி தாங்கள் சேமித்து வைத்திருந்த ரூ. 8,524-யை நிதியாக வழங்கியது குறிப்பிடத்தக்கது.

Trending News

Latest News

You May Like