117-க்கு 117 - சீமான் செய்த வேலையைப் பாருங்க!

வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் ஆண்களுக்கும், பெண்களுக்கும் என சமமாக 117 தொகுதிகளை அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஒதுக்கியுள்ளார்.
வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் ஆட்சியை பிடிக்க ஆளும் அதிமுகவும், எதிர் கட்சியான திமுகவும் தங்களது கூட்டணியை வலுப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றன. அதற்கான கூட்டணி பேச்சுவார்த்தைகளும் திரைமறைவில் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில், மாநில கட்சிகளான திமுக மற்றும் அதிமுக, தேசிய கட்சிகளான பாஜக மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகளுடன் கூட்டணி இல்லை என ஏற்கனவே சீமான் அறிவித்துள்ளார்.
இதனிடையே, தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளில், ஆண்களுக்கு 117 தொகுதிகளும், பெண்களுக்கு 117 தொகுதிகளும் என சரிசமமாக பிரித்து கொடுத்துள்ளார்.
கடந்த 2016-ம் ஆண்டு கடலூர் தொகுதியில் போட்டியிட்ட சீமான் தோல்வியை தழுவினார். இதனால், இந்த முறை, சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடியில் சீமான் போட்டியிட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
எப்படியும் இந்த முறை சீமானை சட்டப் பேரவைக்குள் அனுப்பியே தீருவது என அவரது தம்பிகள் சபதம் செய்துள்ளார்களாம்.