ரூ.1126க்கு உள்நாட்டு விமான டிக்கெட்..!!

ரூ.1126க்கு உள்நாட்டு விமான டிக்கெட்..!!
X

குடியரசு தின விற்பனையில் ஸ்பைஸ்ஜெட் ஒரு சிறப்பு சலுகையை கொண்டு வந்துள்ளது. இதில் உங்கள் விமான டிக்கெட்டை வெறும் ரூ.1126க்கு நீங்கள் பெறலாம். ஆனால் இந்த டிக்கெட்டை எங்கு, எப்படி முன்பதிவு செய்வது என்பதை இந்த கட்டுரையின் மூலம் தெரிந்துக்கொள்ளுங்கள்.

இந்த நிலையில் தற்போது ஸ்பைஸ்ஜெட் வெளியிட்டுள்ள ட்வீட் ஒன்று வைரலாகி வருகின்றது, அதன்படி 1126 ரூபாய்க்கு உள்நாட்டு விமானப் பயணத்தை மேற்கொள்ளலாம் என்று ஸ்பைஸ்ஜெட் அதிகாரப்பூர்வ ட்வீட்டில் பதிவிட்டுள்ளது. ஸ்பைஸ்ஜெட் உங்களுக்காக ஒரு சிறப்பு சலுகையை கொண்டு வந்துள்ளது, இதில் நீங்கள் மலிவாக விமானத்தில் பயணம் செய்யலாம் என்று கூறியுள்ளது.டிக்கெட் முன்பதிவு செய்ய விரும்பும் வாடிக்கையாளர் 24 முதல் 29 ஜனவரி 2023க்குள் செய்ய வேண்டும்.இந்த சலுகையின் கீழ் முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட்டில், நீங்கள் 24 ஜனவரி 2023 முதல் செப்டம்பர் 30 2023 வரை பயணிக்கலாம்.

மேலும் மற்ற உள்ளூர் விமான பயணங்களுக்கும் 26% சதவீதம் வரை தள்ளுபடி வழங்குவதாகவும் அறிவித்துள்ளது. ஆக்ரா, அகமதாபாத், அஜ்மர், அமிர்தசரஸ், அவுரங்காபாத், பாக்தோரா, பெங்களூர், பவனகர், போபால், பூபானேஸ்வர், சண்டிகர், சென்னை, கோவா, டெஹ்ராடூன், தர்மசாலா, ஜுவாஹால், இந்தோர், இந்தோர் உள்ளிட்ட 68 நகரங்களுக்கு டிக்கெட் முன்பதிவு செய்துக் கொள்ளலாம்.

இந்த சலுகை குறித்து கூடுதல் தகவலுக்கு, நீங்கள் அதிகாரப்பூர்வ இணைப்பைப் பார்வையிடலாம் https://www.spicejet.com/.


Next Story
Share it