1. Home
  2. தமிழ்நாடு

110 யூடியூப் சேனல்களுக்கு தடை விதித்தது மத்திய அரசு..!!

110 யூடியூப் சேனல்களுக்கு தடை விதித்தது மத்திய அரசு..!!

நாட்டின் இறையாண்மைக்கு எதிரான தகவல்களை வெளியிட்ட 110 யூடியூப் செய்தி சேனல்கள், 248 இணையதள முகவரிகளுக்கு கடந்த 2021-ம் ஆண்டு டிசம்பர் முதல் மத்திய அரசால் தடை விதிக்கப்பட்டுள்ளது. மக்களவையில் ஒரு எழுத்துப்பூர்வ பதிலில் மத்திய தகவல் ஒளிபரப்புத்துறை மந்திரி அனுராக் தாகூர் இத்தகவலை தெரிவித்தார்.





மற்றொரு கேள்விக்கு பதில் அளித்த அனுராக் தாகூர், பத்திரிகை தகவல் அலுவலகத்தின், உண்மையை சரிபார்க்கும் பிரிவு, ஆயிரத்து 160 செய்திகள் பொய்யானவை என்று கண்டுபிடித்துள்ளது. மக்கள் அனுப்பும் கேள்விகள் அடிப்படையிலும், தாமாக முன்வந்தும் செய்திகளின் உண்மைத்தன்மையை இந்தப் பிரிவு பரிசோதிக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Trending News

Latest News

You May Like