1. Home
  2. தமிழ்நாடு

உரிய தகுதிச் சான்று இல்லாமல் இயக்கப்பட்ட 11 ஆட்டோக்கள் பறிமுதல்..!

Q

திருவள்ளூர் நகரில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் செயல்பட்டு வருகின்றன. இதில் சில ஆட்டோ ஓட்டுநர்கள் உரிமம் மற்றும் தகுதிச் சான்று இல்லாமல் வாகனங்களை இயக்குவதாகத் திருவள்ளூர் மாவட்ட போலீசாருக்கு தொடர்ந்து புகார்கள் வந்துள்ளன.
இதற்கான நடவடிக்கையாக, போக்குவரத்து இன்ஸ்பெக்டர் நாகராஜ் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் சிட்டிபாபு மற்றும் போக்குவரத்து போலீசாருடன் சேர்ந்து திருவள்ளூர் காமராஜர் சிலை அருகே வாகன சோதனை நடத்தினர். அப்போது, அந்த வழியில் வந்த ஆட்டோக்களை நிறுத்திச் சோதனை செய்தனர்.
இதில், உரிய தகுதிச் சான்று இல்லாமல் இயக்கப்பட்ட 11 ஆட்டோக்களைப் பறிமுதல் செய்து, போக்குவரத்து அலுவலகத்தில் ஒப்படைத்தனர். உரிய அனுமதி இல்லாமல் ஆட்டோக்களை இயக்கினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனப் போலீசார் எச்சரித்துள்ளனர்.

Trending News

Latest News

You May Like