1. Home
  2. தமிழ்நாடு

அருணாச்சல்லில் 11 இடங்களின் பெயர்களை மாற்றி அட்டூழியம் செய்த சீனா..!!

அருணாச்சல்லில் 11 இடங்களின் பெயர்களை மாற்றி அட்டூழியம் செய்த சீனா..!!

அருணாச்சலப் பிரதேசத்திற்கு உரிமை கொண்டாடி வரும் சீனா, அதனை தன்னாட்சிப் பிராந்தியமான திபெத்தின் ஒரு அங்கம் எனக் கூறி வருகிறது. திபெத்தின் தெற்கில் உள்ள அருணாச்சலப் பிரதேசத்தின் ஜங்னன் பகுதியை சீனா ஜிஜாங் என குறிப்பிட்டுகிறது. இந்நிலையில், இந்த ஜங்னன் பகுதியைச் சேர்ந்த 11 இடங்களின் பெயர்களை சீன உள்துறை அமைச்சகம் மாற்றி உள்ளது. இதில், அருணாச்சலப் பிரதேசத்தின் தலைநகரான இடா நகரின் அருகில் உள்ள ஒரு நகரின் பெயரையும் சீனா மாற்றியுள்ளது. இந்த பெயர் மாற்ற அறிவிப்பை ஏப்ரல் 2 ஆம் தேதி சீன உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

5 மலை முகடுகள், 2 புகழ்பெற்ற பகுதிகள், 2 நிலப் பகுதிகள், 2 ஆறுகள் ஆகிய 11 இடங்களின் பெயர்களை சீனா பெயர் மாற்றி உள்ளது. இந்த 11 பகுதிகளும் நமது நாட்டின் கட்டுப்பாட்டின் கீழ், நமது நிர்வாகத்தின் கீழ் இருப்பவை. இருந்தும் அவற்றை தங்கள் நாட்டின் கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதிகளின் பெயர்களை மாற்றுவதுபோல் சீனா பெயர் மாற்றம் செய்துள்ளது.

ஏற்கனவே, இதுபோன்று இருமுறை பல பகுதிகளின் பெயர்களை சீனா மாற்றி இருக்கிறது. 2017ல் 6 இடங்களின் பெயர்களையும், 2021ல் 15 இடங்களின் பெயர்களையும் சீனா மாற்றியது. 2021ல் பெயர் மாற்றப்பட்டது குறித்து கருத்து தெரிவித்த வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பக்சி, "அருணாச்சலப் பிரதேசம் எப்போதும் இந்தியாவின் அங்கமாகவே இருந்து வருகிறது. இனியும் அது இந்தியாவின் அங்கமாகவே இருக்கும். அருணாச்சலப் பிரதேசத்தின் சில பெயர்களை மாற்றுவதால் அதன் இந்த நிலை மாறிவிடாது" என தெரிவித்திருந்தார்.

Trending News

Latest News

You May Like