தனியார் பேருந்தும் வேனும் நேருக்கு நேர் மோதி விபத்து : 10 வயது சிறுவன் உட்பட 3 பேர் பலி..!

தேனி அன்னஞ்சி அருகே திண்டுக்கல் - குமுளி புறவழிச் சாலையில் சேலத்தில் இருந்து 40க்கும் மேற்பட்ட பக்தர்களுடன் சபரிமலை கோயிலுக்கு சென்ற தனியார் பேருந்தும் வேணும் நேருக்கு நேர் மோதி விபத்தில் 10 வயது சிறுவன் உட்பட மூன்று பேர் பலியாகினர்.
படுகாயமடைந்த 20க்கும் மேற்பட்ட பெண்கள் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.