பெரும் சோகம் :10th ரிசல்டை பார்க்க சென்ற மாணவர் மரணம்..!
சென்னையை சேர்ந்த ஜீவா மதுரவாயல் அரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். கோடை விடுமுறையில் இருந்து வந்த அவர் இன்று தேர்வு முடிவுகளைத் தெரிந்துகொள்வதற்காக, தனது பள்ளிக்குச் செல்ல திட்டமிட்டார். அந்த வகையில், தனது அண்ணனுடைய வாகனத்தை எடுத்துக் கொண்டு தனது நண்பர்களுடன் பள்ளிக்கு சென்றதாகச் கூறப்படுகிறது.
மதுரவாயில் பாலத்தின் கீழே பைக்கில் சென்றபோது அவருக்கு பின்னால் வேகமாக வந்த லாரி, அவரை மோதியதால் ஜீவா தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார் உடலை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
லாரியை ஓட்டி வந்த ஓட்டுநர் வண்டியை நிறுத்திவிட்டு தப்பிச் சென்ற நிலையில் லாரி பறிமுதல் செய்யப்பட்டது. பத்தாம் வகுப்பு மாணவர் பொதுத்தேர்வு முடிவுகளைத் தெரிந்துகொள்ளச் சென்றபோது சாலை விபத்தில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.