10வது படித்திருந்தால் போதும்..! தமிழ்நாடு அரசு கோவிலில் வேலை..!

அருள்மிகு வனபத்திரகாளி அம்மன் திருக்கோயிலில் காலியாக உள்ள கீழ்கண்ட பணியிடங்களை நிரப்ப இந்து மதத்தைச் சார்ந்த தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
1. பதவியின் பெயர்: சீட்டு விற்பனையாளர்
சம்பளம்: மாதம் ரூ.18,500 முதல் ரூ.58,600 வரை
காலியிடங்கள்: 01
கல்வி தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
2. பதவியின் பெயர்: காவலர்
சம்பளம்: மாதம் ரூ.15,900 முதல் ரூ.50,400 வரை
காலியிடங்கள்: 02
கல்வி தகுதி: தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்
3. பதவியின் பெயர்: கூர்க்கா
சம்பளம்: மாதம் ரூ.15,900 முதல் ரூ.50,400 வரை
காலியிடங்கள்: 01
கல்வி தகுதி: தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்
4. பதவியின் பெயர்: ஏவலர்
சம்பளம்: மாதம் ரூ.10,000 முதல் ரூ.31,500 வரை
காலியிடங்கள்: 01
கல்வி தகுதி: தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்
5. பதவியின் பெயர்: சலவை தொழிலாளர்
சம்பளம்: மாதம் ரூ.11,600 முதல் ரூ.36,800 வரை
காலியிடங்கள்: 01
கல்வி தகுதி: தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்
6. பதவியின் பெயர்: திருவலகு
சம்பளம்: மாதம் ரூ.15,900 முதல் ரூ.50,400 வரை
காலியிடங்கள்: 03
கல்வி தகுதி: தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்
7. பதவியின் பெயர்: பெருக்குபவர்
சம்பளம்: மாதம் ரூ.10,000 முதல் ரூ.31.500 வரை
காலியிடங்கள்: 05
கல்வி தகுதி: தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்
8. பதவியின் பெயர்: உப கோயில் எழுத்தர்
சம்பளம்: மாதம் ரூ.15,700 முதல் ரூ.50,000 வரை
காலியிடங்கள்: 01
கல்வி தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
9. பதவியின் பெயர்: ஓதுவார்
சம்பளம்: மாதம் ரூ.18,500 முதல் ரூ.58,600 வரை
காலியிடங்கள்: 01
கல்வி தகுதி: தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும். சமய நிறுவனங்கள், அரசு நிறுவனங்கள் அல்லது வேறு ஏதேனும் நிறுவனங்களால் நடத்தப்படும் தேவார பாடசாலையால் வழங்கப்பட்ட சம்பந்தப்பட்ட துறையில் குறைந்தபட்சம் மூன்று ஆண்டு படிப்பை முடித்ததற்கான சான்றிதழை பெற்றிருக்க வேண்டும்.
10. பதவியின் பெயர்: உப கோயில் மேலக்குழு
சம்பளம்: மாதம் ரூ.15,700 முதல் ரூ.50,000 வரை
காலியிடங்கள்: 01
கல்வி தகுதி: தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும். சமய நிறுவனங்கள், அரசு நிறுவனங்கள் அல்லது வேறு ஏதேனும் நிறுவனங்களால் நடத்தப்படும் தேவார பாடசாலையால் வழங்கப்பட்ட சம்பந்தப்பட்ட துறையில் குறைந்தபட்சம் மூன்று ஆண்டு படிப்பை முடித்ததற்கான சான்றிதழை பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 40 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
விண்ணப்ப கட்டணம்: கட்டணம் இல்லை
தேர்வு செய்யும் முறை: நேர்காணல் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
முக்கிய தேதிகள்:
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 15.06.2025
விண்ணப்பிக்க கடைசி தேதி: 30.06.2025
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பங்கள் திருக்கோயில் அலுவலகத்தில் ரூ.100 செலுத்தி பெற்றுக் கொள்ளலாம்.
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:
உதவி ஆணையர்/ செயல் அலுவலர், அருள்மிகு வன பத்திரகாளியம்மன் திருக்கோயில், தேக்கம்பட்டி, நெல்லித்துறை அஞ்சல், மேட்டுப்பாளையம் வட்டம், கோவை மாவட்டம் – 641 305.