1. Home
  2. தமிழ்நாடு

10வது,12வது தேர்ச்சி போதும்..! தமிழ்நாடு அரசு அங்கன்வாடி வேலை; 7,783 காலியிடங்கள்..!

1

தமிழ்நாடு முழுவதும் 38 மாவட்டங்களில் இயங்கி வரும் குழந்தைகள் மையங்களில் தற்போது 3,886 அங்கன்வாடி பணியாளர்கள், 305 குறு அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் 3,592 அங்கன்வாடி உதவியாளர்கள் என மொத்தம் 7,783 பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட உள்ளன. இந்த வேலைவாய்ப்புகளுக்கு 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு படித்த தகுதியான விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம். தமிழ்நாட்டின் 38 மாவட்டங்களைச் சேர்ந்தவர்களும் இதற்கு விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்கள்.

எனவே, ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் இந்த வாய்ப்பினைப் பயன்படுத்திக் கொண்டு, கல்வித் தகுதி, விண்ணப்பிக்கும் முறை, வயது வரம்பு மற்றும் பிற விவரங்களை அறிந்து கொண்டு, 23.04.2025 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இப்பணியிடங்களுக்கு யார் யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம், தேவையான கல்வித் தகுதி என்ன, விண்ணப்பிப்பது எப்படி மற்றும் வயது வரம்பு எவ்வளவு போன்ற முழுமையான விவரங்களை தொடர்ந்து காணலாம்.

அதிகாரப்பூர்வ இணையதளம் : https://icds.tn.gov.in/

தமிழ்நாடு அரசு அங்கன்வாடி வேலைவாய்ப்பு 2025 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியின் பெயர் காலியிடங்கள்
அங்கன்வாடி பணியாளர் 3,886
குறு அங்கன்வாடி பணியாளர் 305
அங்கன்வாடி உதவியாளர் 3,592
மொத்தம் 7,783

கல்வித் தகுதிகள்

  • அங்கன்வாடி பணியாளர் பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • குறு அங்கன்வாடி பணியாளர் பதவிக்கு விண்ணப்பிக்கவும் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
  • அதேசமயம், அங்கன்வாடி உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க குறைந்தபட்ச கல்வித் தகுதியாக 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டத்தின் (ICDS) 2025 ஆம் ஆண்டுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பின்படி, ஒவ்வொரு பணிக்கும் நிர்ணயிக்கப்பட்டுள்ள வயது வரம்பு விவரங்கள் பின்வருமாறு:

  • அங்கன்வாடி பணியாளர் மற்றும் குறு அங்கன்வாடி பணியாளர் ஆகிய பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் 25 வயது முதல் 35 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.
  • அதேசமயம், அங்கன்வாடி உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க குறைந்தபட்ச வயது 20 ஆகவும், அதிகபட்ச வயது 40 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

  • பட்டியல், பழங்குடியினர், ஆதரவற்ற விதவைகள் மற்றும் கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்கு கூடுதலாக 5 ஆண்டுகள் வயது விலக்கு அளிக்கப்படும்.

  • அங்கன்வாடி பணியாளர் பணிக்குத் தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு மாத ஊதியமாக ரூ. 7,700 முதல் ரூ. 24,200 வரை வழங்கப்படும்.
  • குறு அங்கன்வாடி பணியாளர் பணிக்கு மாத சம்பளம் ரூ. 5,700 முதல் ரூ. 18,000 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  • அதேபோல், அங்கன்வாடி உதவியாளர் பணிக்குத் தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாத ஊதியமாக ரூ. 4,100 முதல் ரூ. 12,500 வரை வழங்கப்படும்.

இது அடிப்படை ஊதியம் மற்றும் இதர படிகள் அடங்கும். மேலும் விவரங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் காணலாம்.

தமிழ்நாடு அரசு அங்கன்வாடி வேலைவாய்ப்பு 2025 பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் நேரடி நேர்காணல் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் கட்டணம் கிடையாது

எப்படி விண்ணப்பிப்பது:

தமிழ்நாடு அரசு அங்கன்வாடி வேலைவாய்ப்பு 2025 பணிக்கு விண்ணப்பிக்க, தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் முதலில் https://icds.tn.gov.in/ அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள நேரடி இணைப்பு மூலமாகவும் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

பதிவிறக்கம் செய்த விண்ணப்பப் படிவத்தை முழுமையாகப் பூர்த்தி செய்து, அதனுடன் தேவையான அனைத்து கல்விச் சான்றிதழ்களான 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு சான்றிதழ்கள், குடும்ப அட்டை அல்லது ஆதார் அட்டை, சாதிச் சான்றிதழ் மற்றும் வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றின் சுய கையொப்பமிட்ட நகல்களை இணைக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தையும் நகல்களையும் உங்கள் மாவட்டம் அமைந்துள்ள குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலக முகவரிக்கு 23.04.2025 ஆம் தேதிக்குள் தேதிக்குள் தபால் மூலம் சமர்ப்பிக்க வேண்டும்.

Trending News

Latest News

You May Like