1. Home
  2. தமிழ்நாடு

10 மற்றும் 11 ம் வகுப்பு !! காலாண்டு , அரையாண்டு தேர்வுகளில் எத்தனை மதிப்பெண் பெற்றிருந்தாலும் தேர்ச்சி !! இயக்குநர்

10 மற்றும் 11 ம் வகுப்பு !! காலாண்டு , அரையாண்டு தேர்வுகளில் எத்தனை மதிப்பெண் பெற்றிருந்தாலும் தேர்ச்சி !! இயக்குநர்

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, 10ம் வகுப்பு பொதுத்தேர்வை தமிழக அரசு ரத்து செய்தது. மேலும், காலாண்டு, அரையாண்டு தேர்வுகளில் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் மாணவர்களின் வருகைப்பதிவின் அடிப்படையில் மதிப்பெண்களை வழங்கவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

10 மற்றும் 11 ம் வகுப்பு !! காலாண்டு , அரையாண்டு தேர்வுகளில் எத்தனை மதிப்பெண் பெற்றிருந்தாலும் தேர்ச்சி !! இயக்குநர்

இதையடுத்து, தமிழகம் முழுவதும் 10ம் வகுப்பு மாணவர்களின் காலாண்டு, அரையாண்டு மற்றும் வருகை பதிவை கணக்கெடுக்கும் பணியில் ஆசிரியர்கள் முழு வீச்சில் ஈடுபட்டுள்ளனர்.

இதனிடையே, 10ம் வகுப்பு காலாண்டு, அரையாண்டு தேர்வுகளில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் தோல்வி அடைந்து உள்ளதாகவும் , அதாவது 50 சதவீத மாணவர்கள் மட்டுமே தேர்ச்சி பெற்றிருப்பதாக அரசு பள்ளி ஆசிரியர்கள் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர்.

இது மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், 10 மற்றும் 11ம் வகுப்பு காலாண்டு, அரையாண்டு தேர்வுகளில் எத்தனை மதிப்பெண் பெற்றிருந்தாலும் தேர்ச்சி என அரசு தேர்வுகள் இயக்குநர் அறிவித்துள்ளார்.

அதாவது, தேர்வை எழுதியிருந்தாலே தேர்ச்சி என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, அதனடிப்படையில், தேர்ச்சி விவரத்தை தெரிவிக்குமாறு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு ஆணையிடப்பட்டுள்ளது.

Newstm.in

Trending News

Latest News

You May Like