1. Home
  2. தமிழ்நாடு

என்னப்பா சொல்றீங்க..!! 1001 ரூபாய் விலைக்கு தங்க தோசையா..!!

என்னப்பா சொல்றீங்க..!! 1001 ரூபாய் விலைக்கு தங்க தோசையா..!!

சாதா தோசை, மசால் தோசை, கல் தோசை, பொடி தோசை, நெய் தோசை ,கறிவேப்பிலை தோசை, கொத்தமல்லி தோசை, புதினா தோசை என்று தோசையில் ஏகப்பட்ட வகைகள் உண்டு .

இப்படி பலவகையான தோசைகளை உணவகங்கள் தயார் செய்து விற்பனை செய்து வரும் நிலையில் தங்க தோசை என்று அறிமுகப்படுத்தி இருக்கிறது ஒரு உணவகம் . இது உணவு பிரியர்களிடையே மிக வரவேற்பினை பெற்றிருக்கிறது. இந்த ஒரு தங்க தோசை ஆயிரத்து ஒரு ரூபாய்க்கு விற்கப்படுகிறது. கர்நாடக மாநிலத்தில் துமகூரு பகுதியில் உள்ள ஒரு உணவகத்தில் தான் புதிய முயற்சியாக இந்த தங்க தோசை விற்பனை செய்யப்படுகிறது.

என்னப்பா சொல்றீங்க..!! 1001 ரூபாய் விலைக்கு தங்க தோசையா..!!

மசால் தோசை தயார் செய்து அது சூடாக இருக்கும் போதே அந்த தோசையின் மேல் 24 காரட் தங்கம் முலாம் பூசப்பட்ட மெல்லிய தாளினை அதன் மீது வைக்கப்படுகிறது. இந்த தங்க தோசை அந்த உணவகத்தில் பரபரப்பாக விற்பனையாகிறது. தினமும் 20 தங்க மசால் தோசைகள் விற்பனையாகின்றன என்று அந்த உணவகம் தெரிவித்து இருக்கிறது.

இந்த தோசையில் வைக்கப்படும் தங்கமூலாம் பூசப்பட்ட தாள்கள் குஜராத்தில் இருந்து வரவழைக்கப்படுகின்றன என்று தெரிவித்திருக்கிறது அந்த ஹோட்டல் நிர்வாகம். இந்த தங்க தோசைக்கு கோல்டன் பாயில் எடிபல் மசால் தோசை என பெயரிட்டுள்ளனர்.


Trending News

Latest News

You May Like