புத்தாண்டையொட்டி சென்னையில் பாதுகாப்பு பணியில் 10,000 காவலர்கள் !!
புத்தாண்டையொட்டி சென்னையில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர் என மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.
சென்னை மாநகரின் பல்வேறு இடங்களில் திருடுபோன 1,463 மொபைல் போன்கள், 183 இரு சக்கர வாகனங்கள், 12 ஆட்டோக்கள் மற்றும் 46 கார்கள், 2,419.72 கிராம் தங்க நகைகளை போலீசார் மீட்டனர்.எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், மீட்கப்பட்ட பொருட்களை உரியவர்களிடம் காவல் ஆணையர் சங்கர் ஜிவால் ஒப்படைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், புத்தாண்டு பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து விளக்கம் அளித்தார். அப்போது, புத்தாண்டு கொண்டாட்ட பாதுகாப்புக்காக மாநகர் முழுவதும் 10 ஆயிரம் போலீசாருக்கு இரண்டு 'ஷிப்டு'களாக பணி ஒதுக்கப்பட்டுள்ளது.
கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், கடற்கரை உள்ளிட்ட பொது இடங்களில் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு அனுமதி கிடையாது. ஓட்டல்களில் ஆடல், பாடல் நிகழ்ச்சிகள் நடத்தக்கூடாது.டிசம்பர் 31 இரவு வாகன சோதனை தீவிரப்படுத்தப்படும். சென்னையில் புதிதாக நான்கு சைபர் கிரைம் போலீஸ் ஸ்டேஷன்கள் விரைவில் திறக்கப்படும்.
மெரினா உள்ளிட்ட மக்கள் கூடும் இடங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்படும் எனவும் முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும், இவ்வாறு அவர் கூறினார்.
newstm.in