சென்னையில் 10,000 பேருக்கு வேலை வாய்ப்பு!

சென்னை மாநகராட்சி திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் 10,000 பேருக்கு வேலைவாய்ப்பு உள்ளதாக அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
சென்னை மாநகராட்சி திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் தூய்மை பணியாளர்கள் , செக்யூரிட்டி , இலகு, கனரக வாகனங்கள் ஓட்டுநர்கள், பேட்டரி ரிக்சா ஆப்பரேட்டர் பணிக்கு 10,000 பேருக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கடந்த ஒன்றாம் தேதி முதல் திடக்கழிவு மேலாண்மை சென்னையில் ஏழு மண்டலங்களில் அமல்படுத்தப்பட்டது. அதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ள நிலையில், அதிகமானோர் தேவைப்படுவதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது.
வயது 18 முதல் 50க்குள் இருக்க வேண்டும். ஆண், பெண் என இருபாலரும் விண்ணப்பிக்கலாம். நேர்முகத் தேர்வு வைத்து பணியாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
newstm.in