தமிழ்நாட்டில் புதிதாக 1000 தடுப்பணைகள்!
தி.மு.க. எம்.எல்.ஏ. எழிலரசன் பேசும்போது பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக உள்ளது. அதனை நடைமுறைப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்குமா? என்றார்.
இது போன்று பல்வேறு உறுப்பினர்களும் தங்கள் பகுதியில் கால்வாய்களைத் தூர்வார மழை நீரை சேமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்கள்.
இதற்குப் பதில் அளித்து அமைச்சர் துரைமுருகன் பேசியது,
தடுப்பணைகளை அதிகம் கட்டி தண்ணீரை சேமித்தால் வரும் காலங்களில் தண்ணீர் பிரச்சனை இருக்காது என்பது உண்மை. எனவே நிதி அமைச்சர் எனது துறைக்குக் கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். முதலமைச்சருடன் கலந்து பேசி 1000 தடுப்பணைகள் கட்டி மழை நீரை சேமிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இதே போல் உறுப்பினர்களின் கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர் கே.என்.நேரு, தடுப்பணைகள் அதிகம் கட்டினால் 100 ஆண்டுகள் தண்ணீர் பிரச்சனை வராது என்றார்.