1. Home
  2. தமிழ்நாடு

100 சதவீத வாக்குப்பதிவு.. அதுவும் 4 மணிக்கே..!

1

தமிழ்நாடு, புதுச்சேரி உள்பட 21 மாநிலங்களில் உள்ள 102 தொகுதிகளுக்கு கடந்த 19ஆம் தேதி லோக்சபா தேர்தல் நடந்தது. இதையடுத்து இன்று 2வது கட்டமாக லோக்சபா தேர்தல், கேரளா, கர்நாடகா உள்பட 13 மாநிலங்களில் மொத்தம் 88 தொகுதிகளுக்கு வெள்ளிக்கிழமை வாக்குப்பதிவு நடைபெற்றது.

கர்நாடகாவில் உள்ள 28 தொகுதிகளில் 14 தொகுதிகளுக்கு முதற்கட்டமாக நேற்று (ஏப்ரல் 26) தேர்தல் நடைபெற்றது. கர்நாடகாவில் சராசரியாக 69 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன.

குறிப்பாக, கர்நாடகாவின் நகர்ப்புற பகுதியான பெங்களூர் மத்தி, பெங்களூர் தெற்கு லோக்சபா தொகுதிகளில் குறைவான வாக்குகளே பதிவாகியுள்ளன. நகர்ப்புற பகுதி வாக்காளர்கள் வாக்களிப்பதில் ஆர்வம் காட்டாத நிலையில், கிராமப்புற அதுவும் அடிப்படை வசதிகள் கூட கிடைக்காத மக்கள் 100 சதவீத வாக்குப்பதிவு செய்து ஆச்சர்யம் அளித்துள்ளனர்.

கர்நாடகாவின் தட்சிண கன்னடா மாவட்டத்தின் பெல்தங்கடி தாலுக்காவில் உள்ள குக்குக்கிராமம் பஞ்சருமலே. பஞ்சருமலேவில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில், வெள்ளிக்கிழமை நடந்த மக்களவைத் தேர்தலில் 100 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

இந்த குக்கிராமத்தில் மொத்தம் 111 வாக்காளர்கள் உள்ளனர். அவர்கள் அனைவரும் ஒரே வாக்குச் சாவடிக்கு வந்து வரிசையில் நின்று தங்கள் வாக்குகளைச் செலுத்தினர். மாலை 6 மணிக்கு வாக்குப்பதிவு முடிவதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்னதாகவே, அந்த வாக்குச்சாவடியில் ஓட்டுரிமை உள்ள அனைவருமே வாக்களித்து முடித்தனர். இதனால், அங்கு முன்கூட்டியே வாக்குப்பதிவு நிறைவடைந்தது.

Trending News

Latest News

You May Like