அமுலுக்கு வந்தது 1000 சதுரஅடிக்கு மேல் வீடு கட்டுவதற்கான 100 சதவீத அனுமதி கட்டண உயர்வு..!

வீடு, கல்வி நிறுவனங்கள் மற்றும் வணிகம் தொழிற்சாலைகளில் தளப்பரப்பு குறியீட்டில் 1076 அடிக்கு மேல் கட்டடப்பரப்பு இருந்தால் கட்டடங்களுக்கான அனுமதி கட்டணம் 100 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
குடியிருப்பு மற்றும் கல்வி கட்டிடங்களை பொறுத்தவரை தாற்போது கட்டணம் இரு மடங்காக உயர்த்தப்பட்டுள்ளது. தளப்பரப்பு குறியீட்டின் அடிப்படையில் 100 சதுர மீட்டருக்குள் வீடு கட்டுவதற்கான கட்டணம், ஏழை, நடுத்தர மக்களின் நலன் கருதி உயர்த்தப்படவில்லை.
வணிகம் மற்றும் தொழிற்சாலை கட்டிடங்களுக்கும் அதே குறிப்பிட்ட சதுர மீட்டர் அளவில் ஏற்கனவே வசூலிக்கப்பட்ட தொகை இரட்டிப்பாக்கப்பட்டு 210 ரூபாய், 370 ரூபாய், 920 ரூபாய் மற்றும் 2,300 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கிணறு, குடிநீர் தொட்டிக்கான கட்டணமும், சுற்றுச்சுவருக்கான அனுமதி கட்டணமும் இரு மடங்காக உயர்த்தப்பட்டுள்ளது. இதே போல பழைய கட்டிடங்களை பிடிப்பதற்கான அனுமதி கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த புதிய கட்டண உயர்வு நேற்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.