1. Home
  2. தமிழ்நாடு

சொந்த ஊருக்கு செல்வோருக்கு காத்திருக்கும் அதிர்ச்சி : சிறப்பு பேருந்துகளில் 100% கட்டண உயர்வு..!

1

தீபாவளி பண்டிகைகாக பொதுமக்கள் சிரமமின்றி சொந்த ஊர்களுக்கு பயணமாகும் வகையில் தமிழக அரசு போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அதன்படி நேற்று முதல் சிறப்பு பேருந்துகள் இயங்கத் தொடங்கின. சென்னையை பொருத்தவரை பிற்பகல் முதலே போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது. 

மாதவரம் பேருந்து நிலையம், கே.கே.நகர் பேருந்து நிலையம், தாம்பரம் மெப்ஸ் பேருந்து நிலையம், தாம்பரம் ரயில் நிலைய பேருந்து நிறுத்தம், பூவிருந்தவல்லி பைபாஸ் (மாநகர போக்குவரத்துக் கழக பணிமனை), கோயம்பேடு பேருந்து நிலையம் ஆகிய இடங்களில் இருந்து பேருந்துகள் இயக்கப்படுகின்றன. 

ஆம்னி பேருந்துகளைப் பொருத்தவரை, கோயம்பேடு மற்றும் கிளாம்பாக்கம் தற்காலிக பேருந்து நிலையங்கள் வாயிலாக பயணிகளை ஏற்றிச் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கும் வகையில் கார் மற்றும் இதர வாகனங்களில் செல்வோர், தாம்பரம், பெருங்களத்தூர் வழியாக செல்வதைத் தவிர்த்து திருப்போரூர் - செங்கல்பட்டு அல்லது வண்டலூர் வெளி வட்டச் சாலை வழியாக செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தனர்.

பேருந்துகளில் தாம்பரம் மற்றும் பெருங்களத்தூரில் இருந்து பயணம் மேற்கொள்ள முன்புதிவு செய்த பயணிகள் கிளாம்பாக்கம் தற்காலிக பேருந்து நிறுத்தத்தில் ஏறிக்கொள்ள வழிவகை செய்யப்பட்டிருந்தது. தமிழக அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகளின் இயக்கம் குறித்து அறிந்து கொள்வதற்கும் மற்றும் இயக்கம் குறித்து புகார் தெரிவிப்பதற்கும் 94450 14450, 94450 14436 ஆகிய தொலைபேசி எண்களை 24 மணி நேரமும் தொடர்பு கொள்ளலாம். ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூல் செய்தல் உள்ளிட்ட புகார்களுக்கு 1800 425 6151 மற்றும் 044 2474 9002, 044 2628 0445, 044 2628 1611 ஆகிய எண்களைத் தொடர்பு கொள்ளலாம் 

இந்நிலையில் தீபாவளிக்கு ஊர் சென்று சென்னை திரும்புவோர் வசதிக்காக நவ 13-15 வரை மாலை, இரவு நேரங்களில் 60 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது.

இந்த சிறப்புப் பேருந்துகளில், டிக்கெட்டுகளை 100% அதிகப்படுத்தி கட்டணம் வசூலிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. தீபாவளிக்கு மறுநாள் விடுமுறை அறிவிப்பால் மகிழ்ச்சியடந்த மக்களுக்கு, இந்த கட்டண உயர்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Trending News

Latest News

You May Like