100 நாள் வேலை.. தொழிலாளர்கள் மனசாட்சியுடன் பணியாற்ற அமைச்சர் வேண்டுகோள் !!

 | 

வறுமை ஒழிப்பு திட்டங்களில் ஒன்றான 100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் பணியாற்றுபவர்கள் கட்டாயம் தடுப்பூசி போட்டு இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இல்லையெனில் வேலை அளிக்கப்படாது எனவும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை ஊரக வளர்ச்சித் துறை வெளியிட்டது.

மேலும் 100 நாள் வேலை திட்டத்தில் பல்வேறு இடங்களில் அவ்வப்போது புதுப்புதுப் பிரச்னைகள் ஏற்பட்டு வருகிறது. சூப்பர்வைசர் குறைந்த ஊதியம் அளிக்கிறார், முறையாக பணிக்கு வராமல் சிலர் கையெழுத்து மட்டும் போட்டுவிட்டு திரும்புகின்றனர், பணிக்கு வராதவர் பெயரில் வரவுவைத்து பணம்  முறைகேடு செய்யப்படுகிறது என பல புகார்கள் உள்ளன.

மேலும் 100 நாள் வேலைத்திட்டத்தில் பலர் வேலை செய்யாமல் நிழலில் அமர்ந்துகொண்டு செல்வதாகவும் புகார்கள் உள்ளது. இந்த நிலையில், 100 நாள் வேலை திட்டத்தில் தொழிலாளர்கள் தங்கள் பகுதி நலனுக்காக மனசாட்சியுடன் பணியாற்ற வேண்டும் என்று ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து பேசிய அவர், 100 நாள் வேலை திட்ட பணியாளர்களின் ஊதியத்தை ரூ.273லிருந்து ரூ. 300ஆக உயர்த்த பரிசீலனை செய்யப்பட்டு வருவதாக அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தெரிவித்தார். இதனால் 100 நாள் வேலை திட்டத்தில் தொழிலாளர்கள் தங்கள் பகுதி நலனுக்காக மனசாட்சியுடன் பணியாற்ற வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP