100 ஏக்கரில் வீடு... ஆடம்பர கார்… ராஜமௌலி லைஃப் ஸ்டைலே வெற லெவல்!

100 ஏக்கரில் வீடு... ஆடம்பர கார்… ராஜமௌலி லைஃப் ஸ்டைலே வெற லெவல்!

100 ஏக்கரில் வீடு... ஆடம்பர கார்… ராஜமௌலி லைஃப் ஸ்டைலே வெற லெவல்!
X

பாகுபலி திரைப்படம் இயக்குநர் ராஜமௌலியின் புகழை உச்சத்திற்கு கொண்டு சென்றது மட்டுமல்லாமல், அவரது லைஃப் ஸ்டைலையே மாற்றி விட்டது.

ஒன்றரைக்கோடி மதிப்பிலான பி.எம்.டபிள்யூ-7 சீரீஸ் ஆடம்பரக்காரை வாங்கியிருக்கிறார் ராஜமவுலி. அடுத்து 100 ஏக்கர் பரப்பளவில் இடம் வாங்கி பிரம்மாண்ட பங்களாவையும் கட்டி வருகிறார். ஹைதராபாத்தில் இருந்து 200 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள நல்ஹொண்டா அருகே உள்ள கட்டங்கூர் கிராமத்தில் இந்த பண்ணை வீட்டை கட்டி வருகிறார் ராஜமவுலி. தேசிய விருது பெற்ற ஆர்ட் டைரக்டர் ரவிந்தர் ரெட்டி இந்த வீட்டை வடிவமைத்து கொடுத்து கட்டடப்பணிகளை மேற்பாட்வையிட்டு வருகிறார். வீட்டைச் சுற்றி மாமரங்கள், எலுமிச்சை, தென்னை மரங்களுடன் கூடிய தோட்டத்தை இயற்கை உரங்களை கொண்டு வளர்க்கத் திட்டமிட்டுள்ளனர். 


ராஜமவுலி தனது குடும்பத்தை மிகவும் நேசிப்பவர். அவர் குடும்பத்துடன் நேரத்தைக் கழிப்பதை அதிகம் விரும்புவர். ஆகையால் இந்த பண்ணை வீட்டில் அதிக நேரம் செலவிடும் வகையில் பல்வேறு வசதிகளும் இங்கு அமைக்கப்பட்டு வருகிறதாம். எட்டு பிரம்மாண்ட அறைகளுடன் கட்டப்படும் இந்த வீட்டில் ராஜமவுலிக்கு விருப்பமான ப்ரவுன், மெரூன் மற்றும் பச்சை நிறக் கலர் பெயிண்டிங் பூசப்பட உள்ளதாம். தேக்கு மர பலகைகளும் விலையுயர்ந்த கற்களும் பயன்படுத்த திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. கிரிக்கெட் மைதானம், வாலிபால், பேஸ்கட் பால் கோர்ட் அமைக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. அதே போல் மினி தியேட்டர் ஒன்றையும் அமைக்க இருக்கிறார்களாம்.

newstm.in

Next Story
Share it