இதயம் பலவீனமானவங்க இந்த வீடியோவை பார்க்காதீங்க ..!!100 குழந்தைகள் உடல் சிதறி பலி!! பதைபதைக்கும் வீடியோ
ஆப்கானிஸ்தானில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 15-ம் தேதி தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றினர். அந்நாட்டின் பொருளாதார சூழ்நிலை மிகவும் மோசமடைந்து வருகிறது. இந்நிலையில், ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சிப் பொறுப்பேற்ற பின்னர் நடைபெற்ற தாக்குதல்களில் பொதுமக்கள் சுமார் 400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் என ஐ.நா. அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதல்கள் பெரும்பாலும் ஐஎஸ் பயங்கரவாதிகளால் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நேற்று காலை 7.30 மணியளவில் காபூலில் உள்ள காஜ் கல்வி நிலையத்தில் மாணவர்கள் தேர்வு எழுத மையத்திற்கு வந்த போது இந்த திடீர் குண்டுவெடிப்பு சம்பவம் நடந்துள்ளது. இதுவரை கிடைத்த தகவலின் படி, பலியானவர்களில் பெரும்பாலானவர்கள் மாணவர்கள் ஆவர்.
இது குறித்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு, விரைந்து வந்த பாதுகாப்பு படையினர் மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர். கல்வி நிலையத்தில் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தும் முயற்சியாக ஒரு பயங்கரவாதி, மாணவர்கள் கூட்டத்தில் ஒருவனாக புகுந்து இந்த சதித் தாக்குதலை நிகழ்த்தியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
இது குறித்து உள்ளூர் பத்திரிக்கையாளர் பிலால் சர்வாரி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், இதுவரை 100 மாணவர்களின் சடலங்களை கணக்கிட்டுள்ளோம். மேலும் உயிரிழந்த மாணவர்கள் எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என்றும் தேர்வு எழுத வந்துள்ளார்கள் என்றும் பதிவிட்டுள்ளார்.
ஆப்கானிஸ்தானுக்கான அமெரிக்க பயணத்தின் பொறுப்பாளர் கரேன் டெக்கர் தனது ட்வீட்டில், 'காஜ் உயர்கல்வி மையம் மீதான இன்றைய தாக்குதலை அமெரிக்கா வன்மையாகக் கண்டிக்கிறது. தேர்வு எழுதும் மாணவர்கள் நிறைந்த அறையை குறிவைப்பது வெட்கக்கேடானது; அனைத்து மாணவர்களும் நிம்மதியாகவும் அச்சமின்றியும் கல்வியைத் தொடருங்கள்.' என்றார்.
மேலும், "பாதுகாப்புக் குழுக்கள் தளத்தை அடைந்துள்ளன, தாக்குதலின் தன்மை மற்றும் உயிரிழப்புகள் பற்றிய விவரங்கள் பின்னர் வெளியிடப்படும். பொதுமக்கள் இலக்குகளைத் தாக்குவது எதிரியின் மனிதாபிமானமற்ற கொடுமை மற்றும் தார்மீக தரமின்மை ஆகியவற்றை நிரூபிக்கிறது." என்று கூறியுள்ளார்.