1. Home
  2. தமிழ்நாடு

மக்களுக்கு செம ஷாக்! ஒரு கிலோ கேரட் விலை ரூ.100-ஐ தாண்டியது!

மக்களுக்கு செம ஷாக்! ஒரு கிலோ கேரட் விலை ரூ.100-ஐ தாண்டியது!

தமிழ்நாட்டிற்கு தேவையான காய்கறி மார்க்கெட்டுகளுக்கு ஊட்டி, ஒசூர், கொடைக்கானல் உள்ளிட்ட குளிர் பிரதேசங்களில் இருந்து கேரட் விற்பனைக்கு வருகிறது. கடந்த ஜூலை மாதம் வரை, 200 லாரிகளில் விற்பனைக்கு வந்து கொண்டிருந்த கேரட் பருவ நிலை மாற்றம் காரணமாக குறைந்து, ஆகஸ்டில் 150 லாரிகளாகவும், தற்போது 75 லாரிகளாகவும் சரிந்துள்ளது.

கேரட் வரத்து குறைந்துள்ள நிலையில், பண்டிகை, திருமண சீசன் காரணமாக இதன் தேவையும் அதிகரித்துள்ளது. இதனால், கடந்த 2 மாதங்களில் கேரட் விலை, மூன்று மடங்கு விலை உயர்ந்துள்ளது. உழவர் சந்தைகளில் ஜூலை மாதம் கிலோ 40 முதல் 43 ரூபாய் வரை விற்பனையான முதல் ரக ஊட்டி கேரட், ஆகஸ்ட் மாதத்தில் 80 முதல் 86 ரூபாய்க்கு விற்பனையானது. நேற்று கேரட் கிலோ 120 முதல் 135 ரூபாய் வரை விற்பனையானது.

மக்களுக்கு செம ஷாக்! ஒரு கிலோ கேரட் விலை ரூ.100-ஐ தாண்டியது!

வெளி மார்க்கெட்டில் ஜூலை மாதத்தில் கிலோ 45 முதல் 48 ரூபாய் வரை விற்றது, ஆகஸ்டில் 95 முதல் 105 ரூபாயாக உயர்ந்த கேரட், நேற்று 150 முதல் 160 ரூபாயாக விலை உயர்ந்தது. இன்னும் 15 நாட்களுக்கு இதே நிலைதான் நீடிக்க வாய்ப்பு இருப்பதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.


தக்காளி, முருங்கைக்காய், அவரைக்காய், பீன்ஸ், வெங்காயம் உள்பட சிலவற்றின் விலையும் குறைந்து காணப்படுகிறது. மழை காலம் தொடங்கிய பிறகு, ஒவ்வொரு ஆண்டும் காய்கறி விளைச்சல் சற்று பாதிக்கப்பட்டு விலை அதிகரிக்கும். அந்த வகையில் இனி வரக்கூடிய காலம் மழை காலமாக இருக்கும் என்பதால், விலை நிலவரம் எப்படி இருக்கும் என்பதை பொறுத்து இருந்துதான் பார்க்க வேண்டும்.

Trending News

Latest News

You May Like